ரவுடி வசூர் ராஜா நீதிமன்றத்தில் சரண்-வேலூர்

அதிமுக பிரமுகர் கொலை

0
123
Advertisement

வேலூரில் தேடப்பட்டு வந்த ரவுடி வசூர் ராஜா நீதிமன்றத்தில் சரண்

Advertisement

வேலூரில் கொலை, ஆட்கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி வசூர்ராஜா தனது கூட்டாளிகளுடன் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

காட்பாடியை அடுத்த வசூர் பகுதியைச் சேர்ந்த ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது மாவட்டத்தில் பல்வேறு கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அண்மையில் அதிமுக பிரமுகர் கொலை வழக்கிலும், திருவலம் பகுதியில் தொழிலதிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்குகளில் போலீஸின் பிடி இறுகுவதை உணர்ந்த வசூர் ராஜா தனது கூட்டாளிகளான வீரமணி, யோகேஷ் ஆகியோருடன் திருப்பத்தூர்

குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சுமித்ரா முன்னிலையில் சரணடைந்தார். மூவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதையடுத்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

SHARE
Rj suresh
வேலூர்