மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் முப்பெரும் விழா

பேராசிரியர் சொ. சொ. மீனாட்சிசுந்தரம்

Advertisement

நல்காதொழியான் நமக்கு

மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் வரும் பிப்ருவரி  3, 4 மற்றும் 5  ஆகிய மூன்று

நாள்கள் முறையே, மகாகவி பாரதி விழா,  திருவள்ளுவர் திருநாள் மற்றும் திருமுறை விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற உள்ளது.
இவ்வினிய விழாவுக்கு இலக்கியச் சொற்பொழிவாளர் பேராசிரியர் சொ. சொ. மீனாட்சிசுந்தரம் அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்து சொற்பொழிவுகள் ஆற்ற இசைந்துள்ளார்.
03-02-2018, சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் ‘மகாகவி பாரதி விழா’ அன்று “இறவாய் தமிழோடு இருப்பாய் நீ” என்ற தலைப்பிலும்,  04-02-2018, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறும் ‘திருவள்ளுவர் திருநாள்’ அன்று “வல்வரவு வாழ்வார்க்கு உரை” என்னும் தலைப்பிலும், 05-02-2018, திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் .
‘திருமுறை விழா’ அன்று “நல்காதொழியான் நமக்கு” என்னும் தலைப்பிலும் சிறப்பு விருந்தினர் சொற்பொழிவாற்றுகின்றார்.
Advertisement
SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119