ஈஷா யோகா மையத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

சத்குரு

Advertisement
Advertisement

ஒரு விழிப்புணர்வானபொருளாதாரத்தை அடையக்கூடிய விளிம்பில் இந்தியா நிற்கிறது – பாரதத்தை உயர்ந்த தேசமாய்மாற்றியமைக்க வேண்டும்” – சத்குரு

ஈஷா யோகா மையத்தின் அருகாமையிலுள்ள ஈஷா ஹோம் ஸ்கூலில் குடியரசு தின விழா ஜனவரி26ம் தேதி கொண்டாடப்பட்டது.. இதில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு அவர்கள் கலந்துகொண்டு மூவர்ண கொடி ஏற்றினார்.

ஈஷா யோகா மையத்தின் 112 அடி ஆதியோகி இருப்பிடத்தின் வாயிலான மலைவாசலின்முன்பும் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. விழாவில் அசிரமவாசிகள்,பொதுமக்கள், பழங்குடியின கிராமவாசிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சத்குரு அவர்களின் குடியரசு தின செய்தி

நமஸ்காரம்,
பாரதம் – வார்த்தை வரையறைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது, மரபிற்கெல்லாம்
தொன்மையானது. தன்னுடைய பல்லாயிரம் கால இருப்பில் சாத்தியங்களின் உச்சத்தையும் தாளாதுயரங்களையும் அது பார்த்திருக்கிறது.

கடந்த 70 ஆண்டுகால சுதந்திரத்தில், முதல் பல ஆண்டுகள்பிரிவின் வலியிலும், ஒரு தேசமாய் பிழைப்பு நடத்துவதற்கான போராட்டத்திலும் கடந்து போயின.கடந்த 20, 25 ஆண்டுகளில் நாம் வளர்ச்சிப் பாதையில் இருக்கிறோம்.

அனைவரையும் இணைத்துக்கொள்ள கூடிய ஒரு விழிப்புணர்வான பொருளாதாரத்தை
அடையக்கூடிய விளிம்பில் இந்தியா நிற்கிறது.

இந்தச் சமயத்தில், வெளியிலிருந்து ஏற்பட்டதாக்கத்தால் அல்லாமல், நம் தேசத்திற்கு எது சிறப்பாய் வேலை செய்யும் என்பதையும், நம்வருங்காலத்தையும் கருத்தில் கொண்டு, அதன் பண்பினை விழிப்புணர்வுடன் நாம் உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

உள்நிலையிலும் சரி புறச்சூழ்நிலையிலும் சரி, வெற்றிக்கான அர்த்தத்தை மாற்றி அமைக்கக்கூடியஅம்சங்களை வழங்கக்கூடிய திறன் இந்த கலாச்சாரத்திற்கு இருக்கிறது.

முதல்முறையாக,மனிதனுக்கு இருக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு அளிப்பதற்கு தேவையான திறமை, வளம்,தொழில்நுட்பம் எல்லாம் இந்த தலைமுறையிடம் இருக்கிறது.

இல்லாதது என்னவோஅனைவரையும் இணைத்துக் கொள்கிற அந்த விழிப்புணர்வு-நிலைதான். நாம் பாரதம் எனச்சொல்வதற்கு அடிப்படையே இந்தத் தன்மைதான்.

இந்த ஆழந்த பாரம்பரியத்துடைய முழு மகிமையை நாம் சுவைப்பதற்கான நேரம் இது.

சாத்தியங்கள் நிரம்பக்கொண்ட ஒரு மகத்தான தேசம் இது. ஆனால், சாத்தியங்களுக்கும்நிஜத்திற்கும் ஒரு தொலைவு இருக்கிறது.

இந்த தொலைவினை கடப்பதற்கு தேவையான துணிவும்உறுதியும் நம்மிடம் இருக்கிறதா? நம்முன் இருக்கும் கேள்வி இது.

இந்த தலைமுறை மக்களாகிய நாம், நம் தேசத்தை உயர்ந்த தேசமாய் மாற்றக்கூடியை துணிவும்உறுதியும் நம்மிடம் இருக்கிறது என்பதை காண்பித்து, இதனை உயர்ந்த தேசமாய் மாற்றியமைக்கவேண்டும்.

இதனை நாம் நிகழச்செய்வோம்.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119