பச்சை..பச்சையாய்.. பகுதி  56..!

40
507
பச்சை..பச்சையாய்.. பகுதி  56..!
Advertisement

பச்சை..பச்சையாய்.. பகுதி  56..!

Advertisement

முந்திரியைப் பற்றி தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால் முந்திரி பழத்தைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஏன், அது எப்படி இருக்கும் என்று கூட தெரியாது. ஆனால் அந்த முந்திரிப் பழத்தை சாப்பிடுவதால், நம்ப முடியாத பல நன்மைகள் கிடைக்கும்.

முந்திரிப் பழத்தில் புரோட்டீன், பீட்டா-கரோட்டீன், டானின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், நார்ச்சத்துக்கள் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

பொதுவாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தில் தான் அதிகம் இருக்கும். ஆனால் அதை விட 5 மடங்கு அதிகமாக ஒரு முந்திரி பழத்தில் உள்ளது என்றால் பாருங்களேன்.

எனவே இனிமேல் 5 ஆரஞ்சு சாப்பிடுவதற்கு பதில் ஒரு முந்திரிப்பழத்தை சாப்பிடுங்கள்.

நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினால் கஷ்டப்படுபவர்கள், முந்திரிப் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதனை குணமாக்கலாம்.

முந்திரி பழத்தை சாப்பிட்டால், வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் ஸ்கர்வி என்ற நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது. பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின்றது.

முந்திரி பருப்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாதுக்கள் உள்ளதோடு, நோய்கள் மற்றும்

புற்றுநோயினை வராமல் தடுக்க உதவும் தாவர வேதியங்கள் (அ) பைட்டோகெமிக்கல்ஸ் அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான (monounsaturated-fatty acids),

ஒலியிக் மற்றும் பால்மிட்டோலெயிக் அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகிறது.

இத்தகைய கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீமை விளைவிக்ககூடிய கொலஸ்ட்ராலை (low-density lipoprotein cholesterol) குறைத்து,

நன்மை தரக்கூடிய கொலஸ்ட்ராலை(high-density lipoprotein cholesterol) அதிரிக்க செய்கிறது.

மேலும் , ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்கள் கரோனரி இதய நோயினை தடுக்க உதவும் என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் மூலமாக அறியமுடிகிறது.

இதில் உள்ள, மெக்னீசியமானது, எலும்பு வலுவடைவதற்கு உதவுகிறது.

மெக்னீசியம் குறைபாட்டினால் உயர் இரத்த அழுத்தம், தசை இறுக்கம், ஒற்றை தலைவலி மற்றும் சோர்வு ஏற்படுகிறது.

முந்திரி பழத்தை மரத்தில் இருந்து பறித்த 24 மணிநேரத்திற்குள் சாப்பிட வேண்டும். இல்லையெனில் அழுகி விடும்.

அதனால் தான் இப்பழம் இந்தியாவில் அதிகம் விற்கப்படுவதில்லை. மேலும் இப்பழத்தின் ஜூஸானது பிரேசிலில் மிகவும் பிரபலமானது.

தகவல்கள்: ரோகிணி

SHARE