கர்நாடக அரசியலும்…பரப்பன அக்ரகார சிறையும்

முக்கிய செய்தி

Advertisement

ஆடிட்டர் குருமூர்த்தி

பெரிய அதிர்வில் முக்கிய செய்தி வெளியே தெரியாமல் போய்விடும். பாஜக கர்நாடாகாவில் ஆட்சியில் இருந்தால்…
சசிகலாவின் சிறை சலுகைகளை தோண்டி எடுத்திருக்கும்.
சிறை அதிகாரி ரூபா மூலம் சித்தராமையாவரை குற்றச்சாட்டு நீண்டிருக்கும்.
ஆடிட்டர் குருமூர்த்தியின் ஆயுள்கால ஆசையான சசிகலா குடும்பத்தை அழிக்கும் எண்ணத்தை செயல்படுத்தும் காரியத்தை எடியூரப்பா செய்திருப்பார்.
ஆகஸ்ட் 5 க்கு பிறகு அதிமுக..!சசிகலாவை துருப்பு சீட்டாக வைத்து தினகரனின் செயலை முடக்கிப்போடும் காரியம் கனகச்சிதமாக அரங்கேறியிருக்கும்.

இன்றைய ௲ழ்நிலையில்…

காங்கிரசு சசி குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கும். தேவகவுடாவிற்கும் நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்திற்கும் உள்ள நெருக்கத்தால் சுதாகரன் உட்பட அனைவருக்கும் முழு ஆதரவும் கிடைக்கும்.
ஆக…குருமூர்த்தியின் எண்ணத்தில் மண் விழுந்திருக்கிறது. கர்நாடக ஆட்சி ௲ழல் தமிழக அரசியலிலும் எதிர் ஒலிக்கும்.
கர்நாடக சிறை அதிகாரி ரூபா சத்தமே இல்லாதவகையில் உதவாத இடத்திற்கு மாற்றப்படுவார்.
இந்த முக்கிய செய்தி அரசியல் அதிர்வலையில் வெளியே தெரியாமல் அமுங்கிவிட்டது.
Advertisement
SHARE
ஜோதிமுருகன்
பதினைந்து ஆண்டுகள் பத்திரிகை துறையில் அனுபவம்.