இசுலாமிய சின்னங்களை இப்படி அகற்ற முடியுமா?-அர்ஜூன்சம்பத் கேள்வி

இரயில்வே துறை அதிகாரிகளுக்கு இ.ம.க சார்பில் கோரிக்கை மனு அனுப்பட்டுள்ளது.

Advertisement

சேரன் எக்ஸ்பிரஸ்

இரயிலில் பெயர் பலகைகளில் இடம் பெற்றிருந்த தியானலிங்கம், ஆதியோகி படங்களை அகற்றியதற்கு கண்டனம். மீண்டும் மேற்கண்ட படங்களை வைத்திட இந்துமக்கள்கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத்….. கோரிக்கை…!.

மேற்கண்ட சேரன் எக்ஸ்பிரஸ் இரயிலில் – பெட்டிகளில் பொருத்தப்பட்டு இருந்த ஊர் பெயர் பலகைகளில் தியான லிங்கம், ஆதியோகி படங்கள் இடம் பெற்று இருந்தன.

கோவையின் அடையாளமாகவும் புவிசார் குறியீடாகவும் இருந்த மேற்கண்ட படங்களின் மூலம் மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் எளிதில் கோவை செல்லும் இரயில் என புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பயனிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.

ஈஷா யோக மையம் ஒரு இந்து சமய ஆன்மீக நிறுவனம் என்கிற காரணத்தால் காழ்ப்புணர்ச்சியுடனும் வெறுப்புணர்வுடனும், கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களின் தூன்டுதல் பேரிலும் செயல்படும் சில தலித் அமைப்புக்கள் கொடுத்த புகாரின் பேரில் மேற்கண்ட படங்கள் அகற்றப்பட்டு உள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

நிஜாமுதின்

சார்மினார் எக்ஸ்பிரசில் உள்ள, நிஜாமுதின் எக்ஸ்பிரஸில் உள்ள இசுலாமிய சின்னங்களை இப்படி அகற்ற முடியுமா? இத்தகைய நடவடிக்கையால் கோவை மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

எனவே இது விஷயத்தில் மீண்டும் சேரன் எக்ஸ்பிரஸ் பெயர் பலகைகளில் தியானலிங்கம், ஆதியோகி படம் இடம் பெற வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கின்றோம்.

இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளில் இருந்து ஈஷா யோக மையத்திற்கு வருகை தரும் பயனிகளுக்கு இப்பெயர் பலைகையை பார்த்து சரியாக சேரன் எக்ஸ்பிரஸ் இரயிலை அடையாள கண்டு கொள்வார்கள்.

எனவே கிறிஸ்துவ தலித் அமைப்புகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே உள்ளனர். பெரும்பாலான இரயில் பயணிகள் ஈஷா படம் இடம் பெருவதை விரும்புகின்றனர்.

இது குறித்து இரயில்வே துறை அதிகாரிகளுக்கு இ.ம.க சார்பில் கோரிக்கை மனு அனுப்பட்டுள்ளது.

Advertisement
SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119