இரயில் வண்டியில் வாங்க…மிதிவண்டியில் போங்க! சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப்

கிளப் தலைவர் ஜெயராமன்

Advertisement
Advertisement

இரயில் வண்டியில் வாங்க…! மிதிவண்டியில் போங்க…..! என்று புதுமையான அறிவிப்பு ஒன்றை… கோவை “Citizens Voice Club”  வெளியிட்டனர்.

இது குறித்து ” சிட்டிசன்ஸ் வாய்ஸ் ” கிளப் தலைவர் ஜெயராமன் நமது செய்தியாளரிடம் கூறியதாவது:-

கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழநி, மதுரை வழி இராமேஸ்வரம் இரயில்கள் வரவேற்பு மற்றும் விழிப்புணர்வு போட்டிகள் அறிமுகம் இது….! என்றார்.
மேலும் அவர் தொடர்ந்த பேசியதாவது…

திடீரென்ற பேருந்து கட்டண உயர்வினால் மக்கள் வருத்தத்தில் இருக்கும் இச்சமயத்தில், இந்திய இரயில்வே துறை கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழநி, மதுரை, இராமேஸ்வரம் வரை மூன்று புதிய இரயில்கள் அறிமுகப்படுத்தியிருப்பது மிகவும் வரவேற்வக்கத்தக்க பாராட்டப்படவேண்ழய விசயமாகும்.

புதிய அறிவிப்பின்படி கோவையில் இருந்து அதிகாலை,5:15மணிக்கு புறப்படும் ரயில், பொள்ளாச்சிக்கு 6:45மணிக்கு வந்தடைகிறது. மீண்டும், 7:15 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டு காலை 8:30மணிக்கு கோவை சென்றடையும்.

அதே போல மாலை 6:00 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு இரவு 7:15 மணிக்கு பொள்ளாச்சி வந்தடைகிறது. இரவு 7:45மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து திரும்பும் ரயில், இரவு 9:00 மணிக்கு கோவையை சென்றடைகிறது.

இச்சிறப்பு இரயில்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இருக்கும், மேலும் மூன்று மாதத்திற்கு இச்சிறப்பு இரயில்கள் இயக்கப்படும், மக்களின் தொடர்பயன்பாட்டினையும் பயனாளர்களின் எண்ணிக்கையையும் பொருத்து தொடர்ந்து இந்த இரயில்களின் பயன்பாடு நீட்டிக்கப்படும்.

பேருந்து கட்டணங்களிலிருந்து விடுபடும் நோக்கிலும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் விதமும் பெரும்பான்மையான மக்கள் இரயில் சேவையை பயன்படுத்துவது சிறப்பு.

ஆகவே இந்த புதிய இரயில்கள் பற்றிய சரியான விழிப்புணர்வு மற்றும் இச்செய்தியினை மக்களிடம் பரவலாக கொண்டு சேர்க்கும் விதமாக எங்களின் கோயம்புத்தூர் சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் பின்வரும் இரண்டு புதுவிதமான போட்டிகளையும் பரிசுகளையும் அறிவித்திருக்கிறோம்…!

முதல் போட்டியாக கோவையிலிருந்து புறப்படும் இந்த புதிய இரயிலினை பொள்ளாச்சி வரை சென்றவர் அல்லது பொள்ளாச்சியிலிருந்து கோவை வந்தவர்கள் மற்றும் கோவையிலிருந்து பொள்ளாச்சி முதல் பழநி, மதுரை, இராமேஸ்வரம் வரை பயணிக்கும் பயனாளர்கள் அவர்களின் டிக்கெட்டை அவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணுடன் எங்கள் சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் டிராப் பாக்சில் போடலாம்.

மேலும் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் அருகில் இருக்கும் எங்கள் சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் அலுவலகத்திலும் நேரடியாக வழங்கலாம். நேரில் வர இயலாதவர்கள் தங்களின் டிக்கெட் எண், பிஎன்ஆர் நெம்பர், தங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை எங்களின் citizensvoiceclub@gmail.com எனும் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது பின்வரும் எண்களுக்கு எஸ்எம்எஸ்-வாட்சப்பிலும் தெரிவிக்கலாம். (99947 64375, 94421 07546, 98948 26029, 98422 11993, 94435 78224)

நாங்கள் அனைவரது பெயரையும் இணைத்து குலுக்கல் முறையில் வாரம் ஒருவருக்கு ஒரு சைக்கிள் பரிசளித்து கவுரவிக்கவிருக்கிறோம்.

சைக்கிள் பரிசானது பெட்ரோல் சேமிப்பு, பேருந்து கட்டணத்திலிருந்து தப்பித்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் நோக்கில் வழங்கப்படுகிறது.

இரண்டாவது போட்டியாக புதிய இரயில்களின் நேரம் மற்றும் மேலே கூறியுள்ள கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப்ப்பின் புதிய இரயில்களின் விழிப்புணர்விற்கான போட்டியையும் தங்களின் நண்பர்கள் மற்றும் சோசியல் நெட்வொர்க்காகிய பேஸ்புக், டிவிட்டர் முக்கியமாக குறைந்தது 100 வாட்சப் குரூப்களுக்கோ அல்லது தங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர்களுக்கும் அனுப்பிவிட்டு தாங்களின் பெயர் மற்றும் தாங்கள் அனுப்பிய விபரங்களை எங்கள் சிட்டிசன் வாய்ஸ் கிளப் அலுவலகத்தில் தெரிவிக்கும் முதல் 100 நபர்களுக்கு நமது மறைந்தும் மக்கள் மனதில் மறையாத டாக்டர். ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் புத்தகம் பரிசாக வழங்கப்படும்.

கோவையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரசை டாக்டர். ஏபிஜே அப்துல்கலாம் எக்ஸ்பிரஸ் எனும் கோரிக்கையை வலியுறுத்தியும், அவரின் நினைவாகவும் டாக்டர். ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் புத்தகம் வழங்கப்படுகிறது.

மக்கள் நலனில் அக்கறையுள்ள சமூக ஆர்வலர்கள் அனைவரும் இச்செய்தியினை பரவலாக்குமாறு கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் அன்புடன் கேட்டுக்கொள்கிறது. ம

மத்திய இரயில்வேத்துறை மூலமாகவோ அல்லது கோவையின் மக்கள் நலனில் அக்கறையுள்ள சமூக அமைப்புகளின் உதவியுடனும் இப்பரிசுகள் தொடர்ந்து வழங்கப்படும், என்றார் ஜெயராமன்…!

மேலும் தொடர்புக்கு:-

கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் தொலைபேசி : 0422 2302527.
இமெயில்: citizensvoiceclub@gmail.com
C.M. Jayaraman  |   President  94446 34375, 0422 2302527

VA Shanmugam   | Secretary  9442107546

A Karuppiah  |   Treasurer  94430 41105

Jai Krishnan  R, |  Co-ordinator   98948 26029
Citizens VoiceClub Coimbatore Consumer Centre

N.K. VELU  |  Secretary | Anti Corruption Movement, Coimbatore | 98422 11993

P. Kandhasamy  | விவசாயிகள் சங்கம், சாதி மத கட்சி சார்பற்றது, கோவை | 94435 78224…..!

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119