பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!

47
564
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!
Advertisement

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!

Advertisement

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தொலைத் தொடர்பு துறையில் இந்தியாவில் பிரசித்தி பெற்ற நிறுவனம்.

பொதுத்துறை நிறுவனமான இது 2000ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த நிறுவனத்தில் ஜூனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பிரிவில் காலியாக உள்ள 996 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்: இந்தியா முழுவதும் 996 காலியிடங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் 57 காலியிடங்கள் உள்ளன.

வயது: 2017 ஜன., 1 அடிப்படையில் 20 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும்,

எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது சலுகை உள்ளது.

கல்வித்தகுதி: எம்.காம்., / சி.ஏ., / ஏ.சி.எஸ்., / ஐ.சி.டபிள்யூ., / சி.எஸ்., ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்று முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் 2017 செப்., 11 முதல்  அக்., 15 வரை விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய். இதனை ஆன்-லைன் முறையில் செலுத்த வேண்டும்.

கடைசி தேதி: 2017 அக்.,15.

விபரங்களுக்கு: http://externalbsnlexam.com/drjaoaug17/documents/NOTIFICATION_DRJAO_2017.pdf என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்..

தகவல்கள்: ரோகிணி

SHARE