லஞ்சம்…D.S.P., கைது.

ஆம்பூர் நகர எஸ்.ஐ

0
139
Advertisement

வேலூர் மாவட்டம்

Advertisement

சாணாங்குப்பம் லட்சுமி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (41). செங்கல் சூளை நடத்தி வருகிறார். அவர் 2 டிப்பர் லாரி, ஒரு டிராக்டர் வைத்துள்ளார். மணல் குவாரியில் மணல் எடுத்துச் செல்ல பர்மிட் வாங்கி வைத்திருந்தார்.

மணல் குவாரி மூடப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் மணலை விற்பனை செய்யவேண்டும் எனவும் ஒரு லாரிக்கு ₹.20 ஆயிரம் வீதம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என டிஎஸ்பி தன்ராஜ் கூறியுள்ளார்.

மணல் லாரி ஓட்டாவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என மிரட்டியுள்ளார்.  இதையடுத்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் மணல் எடுக்க முடிவானது. இதற்காக ஆம்பூர் நகர எஸ்.ஐ.லூர்து ஜெயராஜ் புரோக்கராக செயல்பட்டு பணம் பெற்றுள்ளார்.

ஒரு லாரிக்கு ₹.20 ஆயிரம் என 6 லாரிக்கு ₹.1,20,000 மற்றும் பொங்கல் போனஸாக ₹.25,000 என மொத்தம் ₹.1,45,000 வாங்கியுள்ளார்.

இதில் ₹.1,20,000 லட்சம் பணத்தை வாங்கிய தன்ராஜ் (54), ₹.25,000 பணத்தை எடுத்துக்கொண்ட எஸ்ஐ.லூர்து ஜெயராஜ் (51) ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

SHARE
Rj suresh
வேலூர்