சட்டம் & ஒழுங்கை மீறல் -தொடர் பகுதி– 1

தமிழ்செய்தி

Advertisement

சட்டத்தை மீறும் ஒலி

Advertisement

ஆயிரம் சட்டங்கள் போட்டாலும்…..! சட்டத்தை மீறுவோர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது.

இது  நாகரீகம் என்று இறுமாப்புடன் வலம் வரும் சண்டித்தனத்தால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள் தான். எனவேதான் சட்டத்தை மீறி நடக்கும் சம்பவங்களை சட்டம்&ஒழுங்கு பாதுகாப்புக்காக அரசு கவனயீர்ப்பு செய்திகளை நமது “தமிழ்செயதி” இனி தொடர்ந்து தர உள்ளது.

எனவே வாசகர்கள் அவரவரின் கவனத்திற்கு வந்த சட்டம் & ஒழுங்கு மீறி நடக்கும் சம்பவங்களை நமது செய்தி பிரிவுக்கு (7373141119) குறைந்தபட்ச ஆதாரத்தோடு அனுப்பிவைக்கவும் அதை சம்பந்தப்பட்ட துறையில் பதிவு செய்து நீதி கேட்ப்போம்.

அந்த வகையில் சட்டத்தை மீறும் ஒலி வரிசையில்…!

காது செவிப்பறையை கிழிந்து விடும் வாகனங்களின் அலறல் ஹாரன் இரைச்சல் தான் முதலிடத்தை பிடிக்கிறது.

குறிப்பிட்ட அளவுக்கு மேல் இரைச்சல் இருந்து கொண்டே இருந்தால் கண் பார்வை, கேட்கும் திறன், இரத்த ஓட்டம், செயல் திறன் இழக்கும் வாய்ப்புகள் உள்ளது என்று, உலக சுகாதார நிறுவனம் தனது ஆய்வின்போது தெரிவித்துள்ளது.

மேலும் அந்த நிறுவனம் சிபாரிசு செய்யும் ஒலி அளவு பகல்நேரங்களில் இடங்களுக்கு ஏற்றவாறு குறைந்தபட்சமாக 55- டெசிபல் முதல் அதிகபட்சமாக 75 – டெசிபல்களிளும், இரவுநேரத்தில் 45- 65 டெசிபல்களில் தான் ஒலி அளவு இருக்க வேண்டும் என்கிறது.

இராமநாதபுரம் மாவட்டம் மெழுகுவர்த்தி நன்பர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் நமக்கு அனுப்பி தகவல்களில் கூறியுள்ளதாவது….

பரமக்குடி நகர் பகுதிக்குள் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களது இருசக்கர வாகனங்களில் அதிகமாக சத்தம் எழுப்பக்கூடிய “சைலன்ஸர்”களை பொருத்திக் கொண்டு தங்களது வாகனங்களை வேகமாக முறுக்கிக் கொண்டு சாலையில் அதிவேகமாக செல்கிறார்கள்..

இவர்களின் வாகனங்கள் அதிக சத்தத்துடன் தொலைவில் வரும் போதே ஏதோ பக்கத்தில் வந்துவிட்டது போல் உணரச் செய்வதால்.., சாலையைக் கடக்க முயலும் முதியவர்கள்., பள்ளிக் குழந்தைகள்., சாலையைக் கடக்காமல் அப்படியே நடுரோட்டில் நின்று விடுவதால் எதிர் வரும் வாகனம் நிலை தடுமாறி அவர்கள் மீது மோதி சாலை விபத்து ஏற்படுகிறது.

விபத்திற்கு முக்கிய காரணமாக அமைவது இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் பிறரை அச்சுறுத்துவதற்காகவே பொருத்தியுள்ள “சைலன்ஸர்கள்” தான்.

பரமக்குடி நகர் காவல்துறையினரும்.,

போக்குவரத்து காவல்துறையினரும்..,

இருசக்கர வாகன ஓட்டிகள் லைசென்ஸ் வைத்துள்ளாரா?

ஆர்.சி புக் வைத்துள்ளாரா?

இன்சூரன்ஸ் நடைமுறையில் உள்ளதா?

என்பதைக் கண்காணிப்பதோடு., அவர்களது வாகனங்களில் ஒலி எழுப்பக்கூடிய ஹாரன் எப்படி பட்டது?., வாகனத்தின் சைலன்ஸர் சத்தம் எப்படி இருக்கிறது? என்பதையும் ஆய்வு செய்து.,

தங்கள் வாகனங்களில் அளவிற்கும் மீறிய ஒலி எழுப்பக்கூடிய சைலன்ஸர்.,ஹாரன் பொருத்தியுள்ள வாகனங்களை பறிமுதல் செய்து காவல்நிலையத்திலோ., நீதிமன்றத்திலோ ஒப்படைத்து.,

பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாகனம் ஓட்டினார் என வழக்கு பதிவு செய்து தண்டிக்காத வரை இப்பிரச்சனை முடிவு பெற போவதில்லை.

இவர்களால், மாலை நேரங்களில் பள்ளி விட்டு வீட்டிற்கு செல்லும் குழந்தைகள் விபத்துக்குள்ளாகி மரணம் ஏற்ப்பட்டால் அதற்கு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய தாங்களும் பொறுப்பாளர்கள் தான் என்பதை உணர்ந்து காவல்துறை மக்களை காக்கும்துறை என செயல்படும் என்பதை மக்களுக்கு உணர்த்துவீர்கள் என்ற நம்பிக்கையோடும்.,

பரமக்குடி நகர் பள்ளிக் குழந்தைகள் மீது அக்கறையோடும்.., தங்களிடம் அன்போடு  கேட்டுக் கொள்கிறேன் என்று முத்துக்குமாரின் தகவலில் உள்ளது.

இது குறித்து அந்த பகுதி அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க நமது “தமிழ்செய்தி”  எதிர்பார்க்கிறது.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119