கோவையில் சாதனை… நீர்வழி பாதைகளை அடைத்த ரத்தத்தின் ரத்தங்கள்

நீர் மேளாண்மை தத்துவத்தை

Advertisement

தண்ணீர்…. நஹு…! நஹு..!

Advertisement

வானம்பொழிகிறது, பூமி நணைகிறது, வாய்க்கால் குளம் குட்டைகள் நிறைகிறது, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடி கடலில் கலக்கிறது…!

ஆனால் அணை கட்ட மறந்து விட்டனர், மக்கள் திலக கட்சி ஆட்சியாளர்கள்….! என்று வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள், விவசாயகட்சிகள் அதன் கூட்டமைப்புகள் மற்றும் அவர்களுடன் எதிர்க்கட்சிகள்…! இவர்களுக்கு பதிலடி கொடுத்தள்ளனர்….!

கோவை வெள்ளலூர் அண்ணா தி.மு.காவினர்….!

மதுரை தெர்மாகோல் தொழில் நுட்பங்களை எல்லாம் தூக்கியெறிந்தது முறியடித்தது…! இவர்களின் நீர் மேளாண்மை…!

பெருகிவரும் குளத்து நீரை சேமிக்க….! குளம் பெருகிவழிந்தோட வேண்டிய “கடமடையில்” மண்ணை அள்ளிப்போட்டு, அணை அமைத்து  தண்ணீரை சேமித்து
சாதனைகள் படைத்து விட்டார்கள்….

!

பொதுவாக “கடமடை” வழியாக பெருகிவ

 

ரும் தண்ணீர், வாய்க்கால் வழியாக ஓடி வேறு ஒரு பகுதியில் உள்ள குளத்தை வளமாக நிறைக்கத்தான்.

இவர்களின் நீர் மோளாண்மை செயல் திட்டத்தால்…!
மாற்றான் தோட்டத்து…..ஊர் குளத்துக்கு தண்ணீர்…. நஹு…! நஹு..!

இவர்களின் குளம் தற்போது “கடமடையை” அளவுக்கு நிறைந்து விட்ட காரணத்தின் அடிப்படையில்…..! இந்த குளத்துக்கு வரும் நொய் நதி நீர்  வரத்து பகுதியான ராஜவாய்க்கால் மதகை தற்போது மூட வேண்டிய நிர்பந்தம்….!
அப்படியே மதகை மூடா விட்டால்…?

 

குளத்தின் அருகே உள்ள தென்னந்தோப்பு..! மற்றும் வாழைத்தோட்டங்களுக்குள் தண்ணீர் சூழ்ந்து விடும்(தற்போது தண்ணீர் சூழ்ந்து விட்டது படம்) மேலும் பழமையான குளக்கரை அதன் உறுதித்தன்மை நீரில் ஊறுவதை பொறுத்து தான்…! அது போக மதகு அடைக்கப்பட்ட காரணத்தால்…!

குளத்துக்கு சொந்தமான நீர் ஆற்றிலே செல்கிறது..!

எது எப்டியோ….! வெள்ளலூர் குளத்து தண்ணீரை சேமிக்க… நீர்வழியை அடைத்து….! 
விணாக அடுத்த குளத்துக்கு தண்ணீர் செல்ல விடாமல் தாடுத்து…! நீர் மேளாண்மை தத்துவத்தை இந்த தரனிக்கு எடுத்துரைத்தது….!கோவை வெள்ளலுர் அதிகாரவர்க்கம்….!

வினை எதிர்வினை

இதை கண்டு பொறுக்க மாட்டாத எதிர் கட்சி விஷமிகள்….!

பொதுபணிதுறை அதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்து விட்டார்கள்….!
விரைந்து வந்த அதிகாரிகள், அந்த மகத்தான மண் அணையை உடைத்து அழித்து விட்டார்கள்…!

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாம் பேசிய போது….!
கடமடை என்பது குளத்தை பாதுகாக்க அமைக்கப்பட்டது, இதை தடுத்துவிட்டால் விரும்பத்தகாத விபரீதமான விளைவுகளை சந்திக்க நேரும்….!
இது குறித்து விபரங்கள் வேண்டும் என்றால் நீங்கள் எங்ககளின் உயர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வது நல்லது என்று இனைப்பை துண்டித்துக் கொண்டார்….!

ரத்தத்தின் ரத்தங்களின்…நீர் மோளாண்மை செயல் திட்டத்தை தவிடுபொடியாகிவிட்டார்கள் எதிரி கட்சியினர்…

மொத்தத்தில் எப்படி இருந்தாலும் அதிகாரிகளுக்கு தமிழ்ச்செய்தியின் வாழ்த்துக்கள்

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119