விடுதலை நாளில் உயிர் காக்கும் சேவை..!

0
207
விடுதலை நாளில் உயிர் காக்கும் சேவை..!
Advertisement

விடுதலை நாளில் உயிர் காக்கும் சேவை..!

“யார் ஒர் மனிதரை வாழவைக்கிறாரோ அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்” என்ற திருக்குர்ஆனின் போதனைப்படி,  விடுதலை நாளில் உயிர் காக்கும் சேவை..!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த 12 ஆண்டுகளாக தமிழகத்தில் தொடர்ந்து இரத்த தான சேவையில் முதலிடம் வகித்து வருகிறது.

                              

என்று தெரிவித்த மாவட்ட செய்தித் தொடர்பாளர் நசீர் அஹமத் மேலும் நம்மிடம் தெரிவித்ததாவது:-

71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (15-8-2017) தமிழகமெங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக இரத்த தான முகாம்கள் சிறப்பாக நடைபெற்ற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் ஆனைமலை கிளை மற்றும்,

பொள்ளாச்சி அரசு மருத்துவனை மற்றும் ஆல்வா மருத்துவமனை இனைந்து இரத்த தான முகாம்,

காலை 9.30(15-8-2017) மணியளவில் ஆனைமலை அரசு மேல் நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.

       

இந்த முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் ஆனைமலை கிளை தலைவர்,

சாஜஹான் தொடங்கி வைத்து “இரத்த தானம் செய்வதின் அவசியத்தை பற்றி” விழிப்புணர்வு உரையாற்றினார்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் திரு. மங்கை மற்றும் ஆல்வா மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் 100 க்கும்  மேற்ப்பட்டோர் இரத்த தானம் செய்ய தயாராக வந்திருந்த நிலையில்  அரசு மருத்துவமனையில்,

ரத்தம் சேகரிக்கும் உபகரணம் பற்றாக்குறை காரணமாக 71 நபர்கள் மட்டுமே இரத்தம்… தானம் கொடுக்க முடிந்து என்றார் நசீர் அஹமத்.

மேலும் ஆனைமலை  காவல்துறை உதவியாளர் தனபதி கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்.

71-வது சுத்திரதின நாளில் நடைபெற்ற மாபெரும் இரத்ததன முகாமில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் முகாம் நிறைவில்…

கிளையின் மருத்துவரனி செயலாளர் காஜாஹுசைன் நன்றியுரை ஆற்றினார்.

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119

Advertisement
SHARE