குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்யக்கூடாது-அர்ஜூன் சம்பத்

பொதுமக்களை கொன்று குவித்த பயங்கரவாதிகள்

திருப்பூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் அழைக்கிறார் அர்ஜுன்சம்பத்...!
Advertisement
Advertisement

குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்யக்கூடாது என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் தமிழக முதல்வருக்கு விடுவித்த கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது கோரிக்கையில் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக முதலமைச்சர் திண்டுக்கல்லில் நடைபெற்ற ஒரு அரசு விழாவில் அறிவித்துள்ளார்.

 சூழ்நிலை காரணமாக தவறு செய்து தண்டனை பெற்றவர்களை நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்வதை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது, ஆனால் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு பல்வேறு குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த பயங்கரவாதிகள் இந்த சலுகையை பயன்படுத்தி விடுதலையாக துடிக்கின்றனர்.

அவர்கள் விடுதலை செய்யப்பட்டால் அது மிக மோசமான விளைவுகளை தமிழகத்தில் உருவாக்கும்.

 மீண்டும் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும், மதக்கலவரம் திட்டமிட்டு நடத்தப்படும். தமிழ்நாடு தாலிபான் நாடாக மாறிவிடும்.

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குண்டு வெடிப்பு குற்ற கைதிகள் விடுதலை செய்யப்படுவது தவறான முடிவாகிவிடும்.

சிறையில் உள்ள கைதிகள் விடுதலை தொடர்பான அறிவிப்பை வரவேற்று தமிழகத்திலுள்ள முஸ்லீம் அமைப்புகள் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

சிறையில் உள்ள பயங்கரவாதிகளை தியாகிகளை போல சித்தரித்து விடுதலை செய்யக்கோரும் அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும்.

மாண்புமிகு தமிழக முதல்வர் இது விஷயத்தில் நேரடியாக தலையிட்டு எந்த அடிப்படையிலும் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவவாளிகளை விடுதலை செய்யக்கூடாது என அந்த  கோரிக்கை……புகார் மனுவில் கூறியுள்ளார்.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119