“பிளாக்மெயில்” பத்திரிகையாளர்கள்….! பரபரப்பான வழக்கு

போலிகள்

தமிழகத்தில் திராவிடகட்சிகளுக்கு மாற்று…காலத்தின் கட்டாயம்” புத்தகவெளியீடு விழா..!
Advertisement

ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று பத்திரிகை.

Advertisement

ஏற்கனவே ஜனநாயகத்தின் தூண்கள்…..! “பைசா” வைரஸ் தாக்கிய காரணத்தால் பலியாகி, நடை பிணமாகி விட்டது. தற்போது ஊடகம் எனும் ஊட்டச்சத்துக்கள் ஊடுருவி, பணநாயகமாக மாறிவிட்ட பத்திரிகைகள் ஏராளமாகி….. ஏளனமாகி விட்டது.

அதிலும் போலிகள் என்பதுதான் கேலிக்கூத்தாகிறது.

சுதந்திர இந்தியாவில் பாக்தாத் கொள்ளையர்களாக மாறிவிட்ட அரசியல்வாதிகள், அவர்களது ஏவாள்துறையாக செயல்படும் அரசுத்துறையில் உள்ள சில அதிகாரிகள் கொள்ளையடித்த பணத்தை குறிவைத்து பல பத்திரிகைகள் “பிளாக்மெயில்” செய்து பிழைப்பு நடத்தி வருகின்றன.

கொள்ளையர்களின் குகையில் அலிபாபா எனும் பத்திரிகையாளர்கள் இன்றுவரை திறம்பட கொள்ளையடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவ்வப்போது அலிபாபாவின் அண்ணன்மார்கள் கொள்ளையர்களிடம் மாட்டிக் கொள்வது வாடிக்கையாகியுள்ளது.

அந்தவகையில், குரங்கு படத்தை வைத்து “பிளாக்மெய்ல்” செய்த அலிபாபா அண்ணன்களின் சம்பவத்தை பார்ப்போம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறையில் தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர் ஆங்கிலோ இந்திய பெண்மணி பேட்டீ ஆணி டவர் .

இவரை  கொடைக்கானல் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் என தன்னை கூறி கொள்ளும் உதயகுமார் அவரது தம்பி  மகேந்திரன் ‘ தினகரன் – கலைஞர் டிவி – வசந்த் டிவி – மதிமுகம் டிவி நிருபர் சுரேஷ்.
கபிரியேல்_ கேப்டன் டிவி – பிரஸ் ரிப்போர்டர்
மணி- வெளிச்சம் டிவி
பழனி முத்துக்குமார்
(பாலிமர் டிவி – திண்டுக்கல்)
ஆகியோர் தன்னை (குரங்கு வேட்டைப் படத்தை காட்டி) பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பேட்டீ ஆணி டவர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரையடுத்து போலீசார் 147, 471, 385, 388, 506(1), I.P.C வரிசைப்படி, குற்றப்பத்திரிக்கை 106/18 -ல் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

இதில் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் பெயர்களை பதிவு செய்துள்ளதுதான்….! பெருத்த அவமானம்….!

இது போல் கோவையில் “பவர் நியூஸ் ” அலிபாபா அண்ணன் ஆபிரகாம் கண்ணனுக்கு,       பாதிக்கப்பட்ட பழனியப்பன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் வலை விரித்துள்ளார்.

அதாவது லோக்கல் மந்திரியின் மூஞ்சி மறைந்த முன்னால் முதல்வர் ஜெயாவின் மறுமுகமாக இருக்கிறது, அதற்கு விழா எடுக்க வேண்டும் என்று விரும்பி, பணம் கொழிக்கும், பதிவுத்துறை அதிகாரிகளிடம், தனது பவரை காட்டி “பிளாக்மெய்ல்” செய்வதாக பழனியப்பன் தனது வலை ஓலையில் தீட்டியுள்ளார் .

பவர் நியூஸ்…. பனங்காட்டு நரி, இது போன்று பல முறை கொள்ளைக்காரர்களுடன்….! நேருக்கு நேர் மோதியவர், என்பது குறிப்பிட்டத்தக்கது….!

இது போன்ற அலிபாபா அண்ணன்கள் ஆயிரம்முண்டு…! இதை தொடர்ந்து ஆராய்வோம்

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119