அழகு, ஆரோக்யம், இயற்கை, அழைக்கின்றார்…. டாக்டர் சாருமதி , பகுதி-5

தங்க புஷ்பம்

Advertisement
Advertisement

நமது GCT NATURE’S PRODUCTS. Herbal & Ayurveda products.. நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் நீங்கள் அறிந்த மூலிகைகளே……! 

இருந்தாலும்கூட பலர் நமது மூலிகை மகத்துவங்களை மறந்துவிட்ட காரணத்தால் அது பற்றிய ஒரு சிறிய விழிப்புணர்வுக்காக அதன் மருத்துவ தன்மையை நாம் வெளிப்படையாக பதிவு செய்கிறோம் என்றார் G.C.T.,நிர்வாக இயக்குனர் டாக்டர் சாருமதி.

மேலும் அவர் கூறுகையில்

நெல்லிக்கனி:-

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.

ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.

ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.

நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.

மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

கரிசலாங்கண்ணி:-

கரிசலாங்கண்ணிச் சாற்றைக் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும்; நரையும் மாறிவிடும்.

கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும்.

கரிசலாங்கண்ணியை உணவாகவோ, மருந்தாகவோ பயன்படுத்தினால், அறிவு விருத்தியாகும். பொன் போன்ற மேனியின் நிறம் மாறும்.

செம்பருத்தி:-

செம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தாலே முடி பட்டுப்போன்று மென்மையாக மாறிவிடும்.

பளபளப்பு கூந்தலுக்கு ஷாம்பே கதியென்று கிடக்கும் பெண்கள், அதற்கு மாற்றாக செம்பருத்தியை பயன்படுத்தலாம்.

கூந்தலைச் சுத்தப்படுத்த செம்பருத்தி இலையை நைசாக அரைத்து தலைக்குப் பூசி குளிக்கலாம். இவ்வாறு தேய்த்துக் குளிப்பதால் முடி சுத்தமாவதுடன் பட்டுப்போல பளபளக்கும்.

சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும்.

இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.

சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன.
இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர். இதனை சப்பாத்து எனவும் அழைக்கின்றனர்.

செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.

செம்பருத்தி மூலிகை தைலத்தின் மகத்துவத்துவம்…..! இந்த தைலத்தை கூந்தலுக்கு பூசி வர, கூந்தல் கருமையாக செழித்து வளரும்.

இளநரை கூட மாறிவிடும் இது சிகை சிறக்கவைக்கும் சிறப்பு தைலம் பற்றிய குறிப்புகள்  என்றார் டாக்டர் சாருமதி

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119