அழகு, ஆரோக்கியம், இயற்கை, அழைக்கின்றார் டாக்டர் சாருமதி……! பகுதி – 7

முல்தானி மெட்டி

Advertisement
Advertisement

பொதுவாக முல்தானி மெட்டியை அனைவருக்கும் தெரிந்திருக்கும். முல்தானி மெட்டி அழகு நிலையங்களில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இது சரும மற்றும் தலைமுடி பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமைகிறது.

இதை பயன்படுத்துவதால் எந்த வித பக்க விளைவும் ஏற்படாது.காரணம் இது இயற்கையாக கிடைப்பது என்கிறார் டாக்டர் சாருமதி…!

முல்தானி மெட்டி என்பது சருமத்திற்கு அழகூட்டும் ஒரு ஒப்பனை பொருள். முல்தானி மெட்டியில் மெக்னீஷியம் குளோரைடு அடங்கி உள்ளது. இது சருமத்தில் உள்ள பருக்களையும், கசடுகளையும் நீக்குகிறது. இது அதிக அளவில் அடங்கியுள்ள ஃபேஸ் பேக்குகள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்கு அடங்கியுள்ளது.

முல்தானியில் நன்மைகள் ஏராளம்.

சருமத்தின் துவாரங்களில் உள்ள அசுத்தங்கள் மற்றும் பாக்டீரியாக்களை நீக்க வல்லது. முகத்தில் உள்ள பருவுக்கு காரணமான காரணிகளை நீக்குவதன் மூலம் புதிய பருக்கள் வராமல் தடுக்கிறது.

மேலும் எவ்வித எதிர்விளைவுகளும் இல்லாத ஒரு தூய்மைப்படுத்தியாகவும் விளங்குகிறது. முல்தானி மெட்டி சருமத்தில் உள்ள தேவையில்லாத எண்ணெய்யை உறிஞ்சி பருக்களும், கட்டிகளும் வராமல் தடுக்கிறது.

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு சருமம் பொலிவிழந்து காணப்படும். சருமத்தில் உள்ள துவாரங்கள் மற்றும் செல்களில் எண்ணெய் பசை அதிக அழுக்கை உண்டாக்கி விடும்.

முல்தானி மெட்டி சருமத்துவாரத்திலும், செல்களிலும் உள்ள எண்ணெய், அழுக்கு மற்றும் தூசிகளையும் நீக்க வல்லது. இதுவே முல்தானி மெட்டியின் மிக முக்கியமான பயன்பாடு.

ஸ்கரப்பர் முல்தானி மெட்டி துடைத்து தேய்த்து கழுவும் ஸ்கரப்பராகவும் பயன்படுகிறது. இதை முகத்தில் தேய்க்கும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும் வெண் புள்ளிகளையும் நீக்குகிறது.

தோலில் உள்ள இறந்த செல்களையும், கரும்புள்ளிகளையும், வெண் புள்ளிகளையும் நீக்குவதற்கு ஃபேஸ் பேக்காகவும் ஸ்கரப்பாகவும் இது பயன்படுகிறது.

வறட்சியான தோலை கொண்ட மக்கள் முல்தானி மெட்டியை குளிர் காலங்களில் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். இதை தவிர, அனைத்து வகையான தோலை கொண்டவர்களும் முல்தானி மெட்டியின் பயனை பெறலாம்.

முல்தானி மெட்டியானது, மாவு போல பிசைய பட்டு நேரடியாக முகத்தில் தடவப்படுகிறது.

இது இயற்கையாக உறிஞ்சக்கூடிய தன்மையை கொண்டுள்ளதால், சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெய்யை நீக்க முல்தானி மெட்டியை பயன்படுத்தலாம்.

புண்களால் ஏற்பட்டுள்ள தழும்புகள், சிறிய தீப்புண் அடையாளங்கள் அல்லது இதர தழும்பு வகைகளை பெரிய அளவில் குறைக்க முல்தானி மெட்டி உதவும்.

ஆரஞ்சு தோலின் பொடி மற்றும் முல்தானி மெட்டியை சரிசமமான அளவில் கலந்து ஹேர் பேக் ஒன்றை நமது G.C.T., நிறுவனம் தயார் செய்துள்ளது,

இதனை தலைச்சருமத்திலும் முடியிலும் தடவுங்கள். 20 நிமிடங்களுக்கு பிறகு, தண்ணீரை கொண்டு தலையை கழுவுங்கள். மிதமான இயற்கை ஷாம்பு கொண்டு, முடியை கழுவுங்கள்.

பொடுகை சிறந்த முறையில் குறைக்க இந்த வீட்டு சிகிச்சையை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பின்பற்றவும்.

முடியின் நுனிகள் பிளவுபடுவதை தடுக்க இது கண்டிஷனராகவும் செயல்படும்.

உங்கள் முடியை முல்தானி மெட்டி கொண்டு அடிக்கடி கழுவுங்கள். இதனால் உங்கள் முடி ஈரப்பதத்துடன் விளங்கி, நுனிகள் பிளவுபடுவது தடுக்கப்படும்.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119