அழகு, ஆரோக்கியம், இயற்கை…..! அழைக்கிறார் டாக்டர் சாருமதி….! பகுதி -4

கரிகாலம் இது

Advertisement

அகத்தின் அழகு முகத்தில்…! முகத்தின் அழகு…? தலைமுடியில்…! அதாவது சிங்காரச்சிகையில்..!

தலை முடி இல்லாத சொட்டை தலையை அல்லது மொட்டை தலையை நினைத்து பாருங்கள்…! உங்கள் தலைமுடி எனும் மணிமுடியின் மகத்துவங்களின் மகிமை தெரியும்..

மயிர் நீங்கின் உயிர் வாழா.. கவரிமான், என்று ஆரம்பித்து ” உன் தலைமுடி உதிர்வதை கூட தாங்க முடியாது கண்ணே..! என்று இன்றைய இளம் கவிகள் வரை இயற்றிய கூந்தல் கவிதைகள் ஏராளம்..

“கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட என்று கண்ணதாசனும்.

” கூனல் பிறை நெற்றியில் குழலாட” என்று வாலியும் வரிந்துகட்டிக் கொண்டு எழுதிய கவித்துவம் வாய்ந்த தலைமுடியை சீவி முடிக்ககூட நேரம் இல்லாமல் ஏதோ ஒரு வீட்டுக்கு போவது போல், அரக்கப்.. பறக்க.. பப்பரப்பா.. என்று தலைவிரிக்கோலமாக பறக்கும் ஐ.டி பெண்களின் தலைமுடியின் விதியை நினைக்கும் போது பரிதாபமாக உள்ளது.

மாசு, தூசுகளால் மாறிவிட்ட கரியமிலம் சூழ்ந்த கரிகாலம் இது…..!

இதில் முதலில் பாதிக்கபடுவது கண்ணகி ஸ்டை கூந்தல்களே..! மயிரை இழப்பவரின் மனவேதனை என்பது கொஞ்சம், நஞ்சமல்ல..! நவீன ரசாயன விளம்பரங்களை நம்பி மயிருக்காக (தலைமுடி) மணிபர்சுகளை காலி செய்தவர்கள் ஏராளம்.

நமது தலைமுடி காக்க இயற்கை அள்ளித் தந்தது மூலிகைகள் ஏராளம்! அதை அனுபவத்தில் கற்று தெளிந்து, நமது முன்னோர்கள் ஆயுர்வேத குறிப்புகளில் அளவில்லாத ஆயுர்வேதக்குறிப்புகளை குறித்து வைத்துள்ளனர்.

அதை அப்படியே தரத்துடன் தயாரித்த நமது GCT Nature’s Herbal Product -ன் மூலிகைத்தைலம் தலைமுடி உதிர்வதை தடுத்து, நீண்ட கருமையான, மென்மையான கூந்தலை தருகிறது.

நமது GCT Hair growth oil  மேலும் இள நரையை போக்கி, உடலில் குளிர்ச்சியை மேம்படுத்துகிறது.

இதே போல் முடி உதிர்தல், வழுக்கைக்கு சரியான தீர்வாக Herbal hair growth powder யையும் விசேஷமாக தயாரித்து தந்து வருகிறோம்.

இது தலை பொடுகை போக்கி நீண்ட கருமையான, மென்மையான கூந்தலுக்கு இயற்கையின் அன்பு பரிசாக தருகிறோம்.

இதில் சேர்க்கப்பட்டுள்ள மூலிகைகள் செம்பருத்தி, மருதாணி, கரிசிலாங்கன்னி, சீகைக்காய், கருவேப்பிலை போன்றவையே, இந்த மூலிகைகளின் மருத்துவத்தை இனி பார்ப்போம்.என்றார் டாக்டர் சாருமதி

Advertisement
SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119