அழகு,ஆரோக்கியம், இயற்கை, அழைக்கின்றார் டாக்டர் சாருமதி….! பகுதி – 9

கேரட்டில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம்

Advertisement
Advertisement

அகத்தின் அழகு முகத்தில்….!
முகத்தின் அழகு  கண்களில்….!

கண்களின் வார்த்தைகள் கவித்துவமானது….!
பேசமுடியாத வார்த்தைகள்….! உணர்வுகளை கண்விழியாலே பேசிய சரித்திரங்கள் ஆயிரம் உண்டு…!

நமது எண்ணங்களை, சிரிப்பு, துக்கம், அழுகை என நவ ரசங்களையும் பிரதிபலிப்பதில் கண் முக்கிய பங்குவகிக்கிறது.

கண் நம் உடலில் பராமரிக்க வேண்டிய உறுப்புகளில் முக்கியமான ஒன்று என்பதற்கு இதற்கு மேல் உதாரணம் தேவையில்லை..!

கண்களில் ஏதாவது பிரச்சனை என்றால் நம் உலகமே இருட்டாகிவிடும்….!

கண்கள் புத்துணர்வோடு இருந்தால் தான் நாமும்  புத்துணர்வோடு இருக்க முடியும்.  கண்களை பாதிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சரியான தூக்கமின்மை. எனவே தினமும் குறைந்தது எட்டு மணி நேரம் தூங்குவது மிக முக்கியம்.

கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் கண்களுக்கு நல்லது.போதிய அளவு தண்ணீர் அருந்த வேண்டும் இது கண்களுக்கு புத்துணர்வை அளிக்கும்.

கண்களில் தூசு விழுந்தால் கண்களை கசக்கவோ கூடாது, தூய்மையான குளிர்ந்த நீரால் கண்களை கழுவ வேண்டும்.

நாம் தற்போது இயற்கை உணவுகளை புறம் தள்ளி பொரித்தெடுத்த உணவுகள், பதப்படுத்தப் பட்ட உணவுகள் ஆகியவற்றை அதிகமாக உண்ணுகிறோம்.மேலும் வைட்டமின் டானிக்குகள், சத்து மாத்திரைகள் ஆகியவற்றை உட்கொள்கிறோம்.

இவைகள் அனைத்துமே உடலுக்கு, வலிவையும், ஊக்கத்தையும் தருவதற்கு பதிலாக பல வகையான வியாதிகளுக்கு காரணமாகின்றன, என்கின்ற விழிபுணர்வை ஏற்படுத்துவதுதான் நமது GCT Nature’s  Herbals & Ayurvedic Products நோக்கம் என்கின்றனர் டாக்டர் சாருமதி.

நமது தினசரி உணவுகளில் கீரைகள், காய்கள், பழங்கள், கிழங்குகள் போன்ற இயற்கையான உணவுகளை சேர்ப்பதால் பல்வேறு நோய்களில் இருந்து நாம் எளிதாக விடுபடலாம்.

அந்த வகையில் மஞ்சள் முள்ளங்கி என அழைக்கப்படும் கேரட்டில் அதிகப்படியான சத்துள்ள….!

கேரட்டில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துகளும் நிறைந்துள்ளதால் உணவு சீரணத்திற்கு உதவுகிறது.

நமது “GCT Nature’s  Herbals & Ayurvedic Products” நிறுவனம்,  கேரட்டை உணவிற்கான பவுடராக” Pure Carrot Powder” என்றும்,
அழகு சாதன பொருள்களுக்கான மேல் பூச்சு Carrot Face Pack– Herbal. கிரீம் என்றும்,  இயற்கையின் மூலிகை தன்மை மாறமல், ஆயுர்வேத தரத்துடன் தயாரிக்கப்பட்டு தற்போது விற்பனையில் தயாராக உள்ளது.

இயற்கை உரத்தில் நன்கு விளையும் சிவப்பு நிற கேரட்டில் கலந்துள்ள 24 ஊட்டசத்துக்கள் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

நம்பித்தான் ஆக வேண்டும் இதோ அதன் சத்துக்கள் பற்றிய விபரங்கள்.

சக்தி (Energy) ஈரப்பதம்/நீர் (Moisture),புரதம் (Protein) கொழுப்பு (Fat) தாதுக்கள் (Minerals) நார்ச்சத்து (Fibre) கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates) கால்சியம் (Calcium) பாஸ்பரஸ் (Phosporous) இரும்பு (Iron) மெக்னீஸியம் (Magnesium) சோடியம் (Sodium) பொட்டாசியம் (Potasium) செம்பு (Copper) மாங்கனீசு (Manganese) ஸிங்க்/நாகம் (Zinc) குரோமியம் (Chromium) கந்தகம் (Sulphur) குளோரின் (Chlorine)கரோட்டீன் (Carotene) தையாமின் (Thiamine) ரைப்போஃப்ளேவின் (Riboflavin) நியாசின் (Niacin) கொலின் (Choline). போன்றவை ஆகும்.

இந்த சத்துக்கள், நமது உடலில் ஏற்படும் பல வகையான நோய் தொற்றுகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டவை. இளம் இனிப்பு சுவையான கேரட்.

மாலைக் கண் நோயை தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.  தொடர்ந்து கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வரும் போது, கண்ணுக்கு அழகு தரும் அருமருந்து என்று ஆங்கில மருந்துவர்களே பரிந்துரை செய்கிறார்கள்.

ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கவும், புற்று நோயிலிருந்து காக்கவும் கேரட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வாய் துர்நாற்றத்தை போக்கும் வல்லமையும், குடல் புண்கள் வரமால் தடுக்கும் தன்மையும் நிறைந்து காணப்படுகிறது.

இவற்றில் உள்ள பீட்டா கரோட்டீன் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைக்கும் ஆற்றலும் கொண்டது.

கேரட்டை எலுமிச்சை சாறு சிறிது கலந்து சாப்பிட்டு வர பித்த கோளாறுகள் நீங்கும்.

மேலும் கேரட்டில் அடங்கி உள்ள உயிர்ச்சத்துக்களின் விபரத்தை பிறகு விரிவாக பார்க்கலாம் ..

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119