அடிப்படை வசதிகள் இல்லாத மேலச்சாக்குளம்

ஊரணியைச் சுற்றி வேலி

0
168
Advertisement

தனிப்பிரிவிற்கும் புகார்மனு

Advertisement

அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்படும் மேலச்சாக்குளம் கிராமத்தினர்

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், மேலச்சாக்குளம் கிராமத்தில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

குறிப்பாக கிராமத்திற்கு செல்லும் சாலையானது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

பள்ளி செல்லும் மாணவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பஞ்சராகிவிடுகிறது.

பொதுமக்களின் அவசரத்தேவைக்கு வாடகை வாகனங்கள் வரத் தயக்கம் காட்டுகின்றன.

கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக தோண்டப்பட்ட ஊரணி முள்வேலி இல்லாததால்   குடிநீர் ஊரணி என்று தெரியாமல் வெளியூரிலிருந்து வரும் ஆட்கள் குளிக்கவும். கால்நடைகளைக் குளிப்பாட்டவும், தண்ணீர்காட்டவும் ஊரணியைப் பயன்படுத்துகின்றனர்.

பள்ளி மாணவர்களும் விவரம் தெரியாமல் குளிப்பதால் பல தொற்றுநோய்களுக்கு ஆளாகின்றனர்.

காவிரி தண்ணீர் பல வருடங்களாக வராத காரணத்தினால் இந்த ஊரணியைப் பெரிதும் நம்பியிருந்தனர்.

தற்பொழுது ஊரணி மோசமான நிலையில் இருப்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் முதுகுளத்தூர் சென்று தங்கள் குடும்பத்திற்குத் தேவையான தண்ணீர் எடுப்பதற்கு ஆபத்தை உணராமல் பயணிக்கின்றனர்.

வழிவகுக்கும் இந்த ஊரணியைச் சுற்றி வேலி அமைத்து பாதுகாத்திட கிராமத்தினர் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் கிராமத்திற்குள் உள்ள ஊரணியில் தண்ணீருக்கு மேலே மின் கம்பி  செல்வதால் பெருத்த உயிர்ச்சேதத்தை ஏற்பட வாய்ப்புள்ளது.

அதனால் மக்கள் குளிப்பதற்கு அஞ்சுகின்றனர். மின்சார வாியத்தில் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் அலச்சியப்போக்கில் இருந்துவருகின்றனர்.

இதற்கிடையில் கிராமத்தினர் கூறுகையில் இப்பிரச்சனைகளுக்கு நிரந்தரத்தீர்வு கிடைக்காவிடில் மேற்கொண்டு மாவட்ட ஆட்சியருக்கும், முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் புகார்மனு அனுப்பவுள்ளோம் எனக் கூறினர்.

செய்திகள் :- கோபிநாத்

SHARE