பேட்மிட்டன் சாம்பியன் -வேலூர்

சிருஷ்டி குரூப் ஆப் ஸ்கூல்

0
38
Advertisement

யாசர்அர்பாத்

மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு பேட்மெண்டன் சாம்பியன் போட்டி  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வாணியம்பாடி அட்வொடிஸ் அமைப்பின் சார்பில் வேலூர் மாவட்ட அளவில் 17வயதுக்குட்பட்டவர்களுக்கு பேட்மெண்டன் சாம்பியன் போட்டி கோட்டை பழைய யுனைடட்டு  பேட்மெண்டன் கிளப் வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சமூக சேவகர் சையத் நிசார் அகமத் தலைமை வகித்தார். தொழில்அதிபர்கள் செல்வா, பர்வேஷ் அகமத், மொஹீத், ஜிஷான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக இயக்குனர் யாசர்அர்பாத் வரவேற்றார்.
சிறப்புஅழைப்பளராக தொழில் அதிபர் மோதாபையாஸ்அஹ்மத் கலந்துக் கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் வேலூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு பள்ளிகளிலிருந்து வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.
வேலூர் சிருஷ்டி குரூப் ஆப் ஸ்கூல் முதன்மை சாம்பியன் பட்டத்தையும், வாணியம்பாடி இசுலாமியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 2 ஆம் இடமும், ராணிப்பேட்டை ஜி.கே ஓல்டு பள்ளி 3 ஆம் இடம் பெற்றனர்.
வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கப்பட்டது. அட்வொடிஸ் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள், மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.
Advertisement
SHARE
Rj suresh
வேலூர்