ஆளுநருக்கு வாழ்ந்தது…. அர்ஜூன் சம்பத்..

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத்

திருப்பூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் அழைக்கிறார் அர்ஜுன்சம்பத்...!
Advertisement
Advertisement

மேதகு தமிழக ஆளுநருக்கு வாழ்த்துக்கள்! மற்றும் வரவேற்பு! என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் இன்று வெளியூட்ட அறிக்கையில் கூறியுள்ளார், மேலும்

அந்த அறிக்கையில் இருப்பதாவது:-

தமிழகத்தில் மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் கோவை மாவட்டம் பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த சமயத்தில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாவட்ட அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தினார்.

மத்திய மாநில அரசுகளின் சார்பில் கோவை மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் நல பணிகள், வளர்ச்சி திட்டங்கள் ஆகியவை குறித்து நல்ல நோக்கத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. மாநில அமைச்சர் மாண்புமிகு S.P.வேலுமணி அவர்களும் இதர அமைச்சர்களும் அரசு அதிகாரிகள் மேதகு ஆளுநரின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.

ஆனால் எதிர் கட்சிகள், திராவிட கழகங்கள், கம்யூனிஸ்ட்களும் ஆளுநரின் இந்த நடவடிக்கையை எதிர்பதோடு மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் செயல் என்று விமர்சித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு வளர்ச்சி திட்டத்தை நிறைவேற்ற உள்ளது.

அத்திகடவு அவிநாசி திட்டம், விமான நிலையம் விரிவாக்கத் திட்டம், கோவை ரயில்வே வளர்ச்சித் திட்டம், நீர் நிலை ஆதரங்களை தூர் வாரும் திட்டம், தொழில், கல்வி, வேலை வாய்ப்பு வளர்ச்சி திட்டங்கள் இப்படி பல திட்டங்களை நிறைவேற்ற உள்ளனர். இதற்கு மத்திய, மாநில அரசுகளின் சுமுகமான உறவுகள் இருக்க வேண்டும். இத்தகைய அனுகுமுறை மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வினர் கடைபிடித்து வருகின்றனர்.

ஆனால் தற்பொழுது மத்தியில் அமைந்துள்ள மோடி அரசினை எதிர்க்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை  எதிர்க்கும் தீய எண்ணங்களுடன் மேதகு ஆளுநர் அவர்களை எதிர்கின்றனர். இதை போல பாண்டிச்சேரி மாநில ஆளுநர் கிரண் பேடி அவர்கள் மீதும் அவதூறு பரப்பி வருகின்றனர்.

ஆளுநர் பதவி என்பது நிர்வாக தலைமை பதவி ஆகும். மத்திய அரசின் பிரதிநிதியாக மட்டும் ஆளுநர் பதவியை குறைத்து மதிப்பிட கூடாது. அரசியல் கண்ணோட்டத்துடனும், காழ்ப்புணர்ச்சியுடனும் ஆளுநர் பதவியை இழிவு படுத்த கூடாது. கோவை மாவட்டத்தில் ஆளுநர் மேற்கொண்ட நடவடிக்கையை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் செயல் படுத்த வேண்டும்.

திராவிடர்கழகம், கம்யூனிஸ்ட்களுக்கு எங்களுடைய கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேரம். ஆளுநருக்கு எங்களுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று உள்ளது  

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119