அம்பத்தூர் நாடகம் யாருக்காக….???

நடை பாதைக்கடைகள்

Advertisement

தினத்தந்தி சிந்துபாத்

Advertisement

அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் நடைபாதையில்  வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று,  சிட்கோ நிர்வாகம் கடந்த 3.4.2018 அன்று எச்சரிக்கை நோட்டீஸ் விடுவித்து,அனைத்து கடைகளை போலீஸ் துணையுடன் அகற்றினார்கள்.

தினத்தந்தி சிந்துபாத் கதை போன்றுகடந்த 15 வருடங்களாக இந்த பிரச்சனை நடந்தேறி வருகின்றது என்றும்,

வியாபாரிகள் கடை வைப்பதும், பின்னர் ஒருநாள் இதுபோல் நோட்டீஸ் ஒட்டுவதும், அகற்றப்படாத கடைகளை அரசு நிர்வாகம்…. அடித்து…. நொறுங்கி…… துவம்சம் செய்வது, ஒரு தொடர்கதைகள்….! அன்றைய தினம் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நல்ல தீனி….!, கண்ணீர் பேட்டி…., வியாபாரிகள் கைது…..,

விதவை பெண்களின் கடைகளை அடித்து நொறுங்கிய அரசுக்கு கண்டனம்…..,கட்சி தலைவர்கள் ஆவேசப் பேட்டி என்று போர் கால செய்திகள் வரும்.

அது தான் இப்போதும் நடக்கபோகின்றதாம்…! என்று நமது “தமிழ்செய்தி” நிருபர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற செய்திகளை நாம் விரிவாக பதிவுசெய்திருந்தோம்….!

அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை “ஆம்பிட் பூங்கா’ சாலையில் உயர் நீதிமன்ற அனுமதியுடன், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் கடைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், அனுமதி வழங்கப்பட்டோருக்குப் பதிலாக வேறு பல நபர்கள் கடைகளை நடத்த துவங்கியதால் தான் கடை அகற்றும் கதை ஆரம்பம் என்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பெருநகர சென்னை மாநகராட்சி , மண்டலம்-7 (அம்பத்தூர்), கோட்டம்-86ல் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஆம்பிட் ஐ.டி. சாலை, ஏ.டி.சி சாலை, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி சாலை, அம்பத்தூர் எஸ்டேட் முதல் பிரதான சாலை போன்ற முக்கிய சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிவந்த கடைகளை மத்திய வட்டார கூடுதல் மாநகர நல அலுவலர் அவர்களின் தலைமையில் மண்டல அலுவலர்-7 மற்றும் மண்டல நல அலுவலர் ஆகியோர் மேற்பார்வையில் துப்புரவு அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து சுகாதாரமற்ற உணவுபொருட்கள் 250கிலோ, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒரு கிலோ, தண்ணிர் பாக்கெட்டுடகள் 200 எண்ணிக்கை மற்றும் சுகாதாரமற்ற துருப்பிடித்த உணவு தயாரிக்கும் அடுப்பு மற்றும் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் ரூ.4,000/- (ரூபாய் நான்காயிரம் மட்டும்) விதிக்கப்பட்டது.

மேலும், சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த கடைகளுக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி தாக்கீது வழங்க நடவடிக்கை எடுத்தனர்.
இதில் மாற்றுத்திறனாளிகளின் கடைகளும் மாட்டிக்கொண்டது…..!

அதோபோல் கடந்த ஏப்ரலிலும் மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டனர்…! இது உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போதே என்பது குறிப்பிட்டத்தக்கது…..!

இன்று இரண்டு மூன்று கடைகள் கோர்ட் உத்தரவு எங்களுடன் அமையப்பெற்றுள்ளது…! என்கின்ற தகவல் நமக்கு கிடைத்ததும் நாம் அது குறித்து விசாரித்தபோது,

அது மாற்றுத்திறனாளிகளின் கடைகள்…! இது உச்சநீதிமன்ற உத்தரவுடன் தான் அமைந்தது என்றனர்…!

இதனிடையே சிட்கோ அய்மா நிர்வாகம் காவல்துறையில் செய்த புகாரின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுடன் அவர்களின் வழக்கறிஞரையும் போலிசார் அள்ளிக்கொண்டு சென்றார்….!

நமது சந்தேகம் என்னவென்றால் ” அடிப்படை சுகாதாரத்தை நடை பாதைக்கடைகள் நாசமாக்கிவிட்டது” என்று தானே சிட்கோ நிர்வாகம் கடைகளை அகற்றுவோம் என்று வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்தது…?

இரண்டு மாதங்களை கடந்தும் இன்றய தேதி வரை சாக்கடைகள் அப்படியே தான் உள்ளது…!

அப்படியென்றால் ஏன்..? எதற்காக..? இல்லை யாருக்காக…? இந்த அகற்றல் நாடகம்…?

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119