அம்பத்தூர் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் கபட நாடகம்….! கையேந்தி பவன் வாடிக்கையாளர்கள் மனக்குமுறல்…..!

வணிகர்கள் கண்ணீர்

Advertisement

அம்பத்தூர் சிட்கோ எச்சரிக்கை நோட்டீஸ்

Advertisement

அம்பத்தூர்தொழிற்பேட்டை பகுதியில் நடைபாதையில்  வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று,  சிட்கோ நிர்வாகம் கடந்த 3.4.2018 அன்று எச்சரிக்கை நோட்டீஸ் விடுவித்துள்ளது.
அதில் இந்த நோட்டீஸ்சில் உள்ள தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் கடைகளை அகற்றியாக வேண்டும்.

கடைகளை அகற்றுவதற்கான காரணங்களை
பற்றி நமது நிருபர் குழு விசாரணையில் கிடைத்த விபரங்கள்:-

கடந்த 15 வருடங்களாக இந்த பிரச்சனை நடந்தேறி வருகின்றது.
வியாபாரிகள் கடை வைப்பதும், பின்னர் ஒருநாள் இதுபோல் நோட்டீஸ் ஒட்டுவதும், அகற்றப்படாத கடைகளை அரசு நிர்வாகம்…. அடித்து…. நொறுங்கி…… துவம்சம் செய்வது, ஒரு தொடர்கதைகள்….!

அன்றைய தினம் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நல்ல தீனி….!, கண்ணீர் பேட்டி…., வியாபாரிகள் கைது…..,
விதவை பெண்களின் கடைகளை அடித்து நொறுங்கிய அரசுக்கு கண்டனம்…..

கட்சி தலைவர்கள் ஆவேசப் பேட்டி என்று போர் கால செய்திகள் வரும்.
அது தான் இப்போதும் நடக்கபோகின்றதாம்…..!
கடந்த கால கட்டத்தில் நடைபெற்ற,
“அம்பத்தூர் ஆக்கிரமிப்பு நாடகத்தின் போது,”
வந்த பத்திரிகை செய்திகளில் ஒன்று இதே செய்திகள் மீண்டும் வந்தால் கூட ஆச்சரியம் இல்லை சரி செய்திகளை படிக்கவும்:-

(முதலில் ஒரு புகார் செய்தி)

பொதுமக்கள் சிக்கல்

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பிரதான சாலையின் இருமருங்கிலும் பாதசாரிகள் நடப்பதற்கு நடைபாதை உள்ளது.

ஆனால், பெட்டிக் கடைகள், தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்டவை நடைபாதையை ஆக்கிரமித்துள்ளன. இதனால், பாதசாரிகள் சாலையில் இறங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

“பாதசாரிகள் நடப்பதற்கு மட்டும் நடைபாதை’ என மாநகராட்சி பதாகை வைத்துள்ளது. மேலும், நடைபாதை ஓரத்தில் “வாகனங்களை நிறுத்தக்கூடாது’ என காவல் துறை சார்பில் அறிவிப்புப் பலகைகளும் உள்ளன.

ஆனால், பெட்டிக் கடைகளின் வாடிக்கையாளர்கள், சாலையின் இரு ஓரங்களிலும் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், வாகன நெரிசல், விபத்துகள் ஏற்படுகின்றன.
மேலும் நடைபாதை பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருள்களும் விற்கப்படுகின்றன. பொது இடங்களில் புகை பிடிப்பவர்களால் சாலையில் செல்லும் பெண்கள் உள்பட பொதுமக்கள் சிரமத்துடன் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.

அம்பத்தூர் தொழிற்பேட்டை “ஆம்பிட் பூங்கா’ சாலையில் தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இங்கு பணியாற்றுபவர்களை நுகர்வோர்களாக கொண்டு பெட்டிக்கடைகள், உணவகங்கள், துணிக் கடைகள், தேநீர் நிலையங்கள் நடைபாதையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், நடைபாதையையொட்டி கழிவு நீர் செல்லும் கால்வாய்களில் நெகிழிகள் (பாலிதீன்கள்) வீசுப்படுவதால் கழிவு நீர் தேங்குகிறது. இதனால், கொசுக்கள் உள்ளிட்ட நோய்க் கிருமிகள் ஏற்பட்டு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.

நடைபாதை பெட்டிக்கடைகளில் உயர் நீதிமன்ற அனுமதி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் கடைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், அனுமதி வழங்கப்பட்டோருக்குப் பதிலாக வேறு நபர்கள் கடைகளை நடத்துகின்றனர்.

சில கடைகள் அனுமதி இல்லாமலும் இயங்குகின்றன. இவற்றால், பாதசாரிகள் நடக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

 அனுமதி வழங்கக் கூடாது: இது குறித்து பாதசாரிகள் குருநாதன், சாந்தினி கூறியதாவது: 
பாதசாரிகள் நடக்கத்தான் நடைபாதை என மாநகராட்சி தெரிவித்துள்ளது. நாள்தோறும் நடைபாதையில் நடக்க முடியாமல் சாலையில் செல்ல வேண்டியுள்ளது. இதனால், வாகனங்கள் மோதிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
அத்துடன் “ஆம்பிட் பூங்கா’ சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் இல்லை. இதனால், வாகனங்கள் தாறுமாறாக சாலையைக் கடக்கின்றன. இந்த நிலையில் நடைபாதையில் கடைவைத்திருப்பவர்களுக்கு வேறு இடங்களை மாநகராட்சி ஒதுக்கி, ஒழுங்குபடுத்தலாம்.

மேலும், நடைபாதை கடைகளுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கக் கூடாது. சுகாதார சீர்கேடு, வாகன நெரிசலுக்கு வழிவகுக்கும் நடைபாதை கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

(அதன் பிறகு நடந்த நாடகத்தின் தொகுப்பு செய்திகள்)

பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திரு. சைதை துரைசாமி அவர்கள் மற்றும் ஆணையாளர் டாக்டர்.பி.சந்தரமோகன், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில்.

பெருநகர சென்னை மாநகராட்சி , மண்டலம்-7 (அம்பத்தூர்), கோட்டம்-86ல் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஆம்பிட் ஐ.டி. சாலை, ஏ.டி.சி சாலை, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி சாலை, அம்பத்தூர் எஸ்டேட் முதல் பிரதான சாலை போன்ற முக்கிய சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிவந்த கடைகளை 01.07.2016 அன்று மத்திய வட்டார கூடுதல் மாநகர நல அலுவலர் அவர்களின் தலைமையில் மண்டல அலுவலர்-7 மற்றும் மண்டல நல அலுவலர் ஆகியோர் மேற்பார்வையில் துப்புரவு அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து சுகாதாரமற்ற உணவுபொருட்கள் 250கிலோ, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒரு கிலோ, தண்ணிர் பாக்கெட்டுடகள் 200 எண்ணிக்கை மற்றும் சுகாதாரமற்ற துருப்பிடித்த உணவு தயாரிக்கும் அடுப்பு மற்றும் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் ரூ.4,000/- (ரூபாய் நான்காயிரம் மட்டும்) விதிக்கப்பட்டது.

மேலும், சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த கடைகளுக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி தாக்கீது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  (நன்றி:- தினமணி)

ஆகமொத்தத்தில் அரசு நடத்தும், அம்பத்தூர் ஆக்கிரமிப்பு நாடகத்தில் கடுமையாக பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி வியாபாரிகள்…!?!
பரிதவிக்கின்றவர்கள் உழைக்கும் தொழிலாளிகள்…!!!!
லாபம் பார்க்க இருப்பவர், அரசு மற்றும் தனியார் அமைப்புகள்….!
பொழுது போக்க…. பத்திரிகை, ஊடகவியலாளர்கள்…..!

அம்பத்தூர் தொழிற்பேட்டையின், ” கையேந்தி பவன்” வாடிக்கையாளர்களான……!

உழைக்கும் வர்க்கத்தின் பாட்டாளிகள் நம்மிடம் மனம் நொந்துபோய் கூறியதாவது:-

“சுயமுன்னேற்றத்திற்காக இளைஞர்கள் சுயத்தொழில் செய்யவேண்டும் என்று மேடைகளில், வலியுறுத்தி வரும்.
மத்திய – மாநில அரசுகளின் உச்சகட்ட கபடவேட நாடகம் தான் இது….! என்று மனக்குமுறலுடன் கூறினர்கள்….!

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119