போலி சாமியார்களின் பட்டியல் வெளியீடு…!

0
146
போலி சாமியார்களின் பட்டியல் வெளியீடு…!
Advertisement

போலி சாமியார்களின் பட்டியல் வெளியீடு…!

Advertisement

இந்து சாதுக்களின் தலைமை அமைப்பான அகில பாரதிய அக்காரா பரிஷத் குர்மீத் சிங், அசராம் பாபு, ராதே மா உள்பட 14 போலி சாமியர்கள் பெயரை வெளியிட்டு உள்ளது.

அலகாபாத்தில் உள்ள தலைமையகத்தில் பல்வேறு மடங்களை சேர்ந்த பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்ற பின்னர் இந்த பட்டியலானது வெளியிடப்பட்டு உள்ளது.

“பாரம்பரியத்திற்கு உட்படாத மற்றும் கேள்விக்குரிய செயல்களில் ஈடுபடும் இதுபோன்ற சாமியார்களிடம் கவனமாக இருக்கவேண்டும்,

இவர்களால் பிற சாதுக்கள் மற்றும் முனிவர்களுக்கு அவமரியாதையை ஏற்படுத்துகிறது,” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அசராம் பாபு, ராதே மா, சச்சிதானந்த கிரி,குர்மீத் சிங், பாபா ஓம், நிர்மல்ஜித் சிங், இச்சாதாரி பீமானந்த், சுவாமி அசீமானந்த், ஓம் நமக சிவாய் பாபா,

நாராயண் சாய், ராம்பால், ஆச்சார்யா குஷ்முனி,பிரகஸ்பதி கிரி, மல்க்கான் சிங் ஆகியோர் போலி சாமியார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பான அறிக்கையானது மத்திய, மாநில அரசுக்களிடம் வழங்கப்படும் போலி சாமியார்கள் மீது சட்டப்படி,

கடும் நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

விரைவில் மேலும் 28 போலி சாமியார்களின் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119

SHARE