ஏர்டெல் நிறுவனத்தின் புதிய சலுகைகள்..!

28
532
ஏர்டெல் நிறுவனத்தின் புதிய சலுகைகள்..!
Advertisement

ஏர்டெல் நிறுவனத்தின் புதிய சலுகைகள்..!

Advertisement

ஜியோ நிறுவனம் துவங்கப்பட்டு ஓராண்டு நிறைவு அடைந்தும், ஜியோ மற்றும் ஏர்டெல் இடையேயான போட்டி குறைந்தபாடில்லை. ஏர்டெல் நிறுவனத்தின் புதிய சலுகைகள்..!

ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெலும், பிஎஸ்என்எல்., நிறுவனமும் பல அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றன.

இதன் அடுத்த கட்டமாக  ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக,

மிக குறைந்த கட்டணத்திலான 4 புதிய சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு மிக குறைந்த கட்டணமாக ரூ.5 க்கு 4ஜிபி டேட்டா சலுகையை ஏர்டெல் அறிவித்துள்ளது.

7 நாட்கள் வாலிடிட்டி கொண்ட இந்த திட்டம் 4ஜி சிம் கார்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என ஏர்டெல் அறிவித்துள்ளது.

7 நாட்களுக்கு பிறகு மீதமுள்ள டேட்டா நீட்டிக்கப்படாது.

அதே சமயம் புதிதாக ஏர்டெல் சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த 4ஜிபி டேட்டா சலுகை 54 நாட்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த திட்டமாக ரூ.8 க்கு நிமிடத்திற்கு 30 பைசா கட்டணத்தில் வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட உள்ளது. இதன் வாலிடிட்டி 56 நாட்களாகும்.

மேலும் ரூ.15 க்கு நிமிடத்திற்கு 10 பைசா கட்டணத்தில் வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட உள்ளது.

இதன் வாலிடிட்டி 27 நாட்கள். ரூ.40 க்கு அன்லிமிடெட் வாலிடிட்டியில் வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட உள்ளது.

SHARE