நகைச்சுவை நடிகர் அல்வா வாசு காலமானார்..!

35
692
நகைச்சுவை நடிகர் அல்வா வாசு காலமானார்..!
Advertisement

நகைச்சுவை நடிகர் அல்வா வாசு காலமானார்..!

Advertisement

பிரபல காமெடி மற்றும் குணச்சித்ர நடிகர் அல்வா வாசு என்கிற வாசுதேவன், உடல்நலக்குறைவால்  காலமானார்.

மதுரை மாவட்டம் ஹார்விபட்டியை  சேர்ந்தவர் வாசுதேவன். பி.ஏ., பட்டம் பெற்ற இவர், சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தார்.

மறைந்த இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக பணியாற்றிய வாசுதேவன், வாழ்க்கை சக்கரம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அதன்பின் பல படங்களில் சின்ன வேடங்களில் நடித்தாலும் சத்யராஜின் அமைதிப்படை படம் தான் அவரை பிரபலமாக்கியது.

அந்தப்படத்தில் அவர், சத்யராஜூக்கு அல்வா செட் பண்ணி கொடுப்பார். அதனாலேயே அவருடன் அல்வா என்ற அடைமொழியும் ஒட்டிக்கொள்ள அல்வா வாசுவானார்.

தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தார்.

வடிவேலுவுடன் இவர் நடித்த “இங்கிலீஷ்காரன், கருப்புசாமி குத்தைக்காரன், எல்லாம் அவன் செயல்” உட்பட… பல படங்கள் காமெடியில் அவரை பிரபலமாக்கியது.

நூற்றுகணக்கான படங்களில் நடித்து, மக்களை சிரிக்க வைத்த கலைஞர்,

கல்லீரல் முழுமையாக செயலிழந்து மிகவும் கவலைக்கிடமான முறையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் அவர் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்நிலையில் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள   ருக்மணிபாளையத்தில்  அவரது வீட்டில்  காலமானார்..

SHARE