அஜீத்திற்கு ஆபரேஷன்..! 3 மாதம் கட்டாய ஓய்வு..!

278
448
அஜீத்திற்கு ஆபரேஷன்..! 3 மாதம் கட்டாய ஓய்வு..!
Advertisement

அஜீத்திற்கு ஆபரேஷன்..! 3 மாதம் கட்டாய ஓய்வு..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். சண்டைக்காட்சிகளில் எப்பவும் அதிக ரிஸ்க் எடுத்து நடிக்க கூடியவர். அஜீத்திற்கு ஆபரேஷன்..! 3 மாதம் கட்டாய ஓய்வு..!

இதனால் அவ்வப்போது உடலில் காயம் ஏற்பட்டு சில ஆபரேஷன்களும் செய்துள்ளார்.

சமீபத்தில் வெளியான விவேகம் படத்தின் ஷூட்டிங்கில் அஜித் நிறைய ரிஸ்க் எடுத்துள்ளார். இதில் அவருக்கு தோளில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித்திற்கு சிறிய அளவிலான ஆபரேஷன் நடந்துள்ளது.

சிகிச்சை முடிந்து அஜித் வீட்டிற்கு திரும்பிவிட்டார். மருத்துவர்கள் 3 மாதம் அவரை ஓய்வெடுக்க சொல்லி அறிவுறுத்தி உள்ளனர்.

3 மாதம் ஓய்வுக்கு பிறகே அஜித், அடுத்தப்படத்தில் நடிப்பது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

அஜித்தை இயக்க முன்னணி இயக்குநர்கள் தயாராகி வருகின்றனர். அது யார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Advertisement
SHARE