விவசாயத்தில் கின்னஸ் சாதனைக்கு முயற்சித்த நடிகர் ஆரி..!

47
556
விவசாயத்தில் கின்னஸ் சாதனைக்கு முயற்சித்த நடிகர் ஆரி..!
Advertisement

விவசாயத்தில் கின்னஸ் சாதனைக்கு முயற்சித்த நடிகர் ஆரி..!

Advertisement

நடிகர் ஆரி இயற்கை விவசாயத்தை வலியுறுத்தும் மாறுவோம் மாற்றுவோம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். விவசாயத்தில் கின்னஸ் சாதனைக்கு முயற்சித்த நடிகர் ஆரி..!

படப்பிடிப்பு இல்லாத காலத்தில் விவசாயிகளை சந்தித்து அவர்களை இயற்கை விவசாயத்துக்கு மாற்றி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக நானும் ஒரு விவசாயி என்ற கின்னஸ் சாதனை நிகழ்வு  ஒன்றை திண்டிவனம் அருகில் உள்ள அவனிபூர் – நல்லநிலம் என்ற ஊரில்  நேற்று நடத்தினார்.

இதில் சத்யபாமா யூனிவெர்சிட்டி மற்ற ஜேபிஆர் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும்

பொதுமக்கள் மொத்தம் 2683 பேர் ஒரே நேரத்தில் கலந்துகொண்டு, ஒருவருக்கு தலா இரண்டு நாற்றுகள் வீதம் நட்டனர். 

இந்த நிகழ்வு சீனாவில் நடத்திய கின்னஸ் சாதனையானா 2017 பேரை கொண்டு நடத்திய சாதனையை முறியடிக்கும் விதமாக 2683 பேரை கொண்டு நிகழ்த்தப்பட்டது.

“இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் கின்னஸ் சாதனை பெறவேண்டும் என்பதுடன் மட்டும் இல்லாமல் விவசாயத்தின் பெருமையை பறை சாற்றும் விதமாக அமைக்க பெற்றது.

இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடமும், மாணவர்களிடமும் நானும் ஒரு விவசாயி என்ற விழிப்புணர்வை ஊட்டியுள்ளோம்.

ஒவ்வொருவரும் விவசாயியாக மாறி தனக்கான உணவை தானே உற்பத்தி செய்ய வேண்டும். விவசாயம் வியாபாரம் அல்ல வாழ்க்கை முறை.

விவசாயத்தை மீட்டெடுக்கவும், நாட்டு விதைகளை காப்பாற்றவும் இந்த முயற்சியை செய்துள்ளோம். விவசாயத்தில் கின்னஸ் சாதனைக்கு முயற்சித்த நடிகர் ஆரி..!

3 ஏக்கரில் நாட்டு கத்தரி செடி நடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிளாஷ்டிக் பைகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை” என்றார் ஆரி.

இந்த நிகழ்வின் போது மாணவர்களை உற்சாகப்படுத்த கிராமிய பாடகி சின்ன பொண்ணு கலந்து கொண்டு நாட்டுபுற பாடல்களை பாடினார்.

நண்பர்கள் குழுவினர் பறை இசைத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

மேலும் ஸ்டண்ட் மாஸ்டர் பாண்டியன் குழுவினர் சிலம்பாட்டம் நிகழ்த்தினர்.

இவரை போன்று மற்ற முக்கிய புள்ளிகளும் நமது இயற்கை விவசாயத்தி ஆதரித்தால், நமது அடுத்த தலைமுறையினர் அரோக்கியமாக வாழும்..

செய்திகள்: ரோகிணி

SHARE