அப்ரமாஞ்சி-நல்ல மருந்து… நம்ம நாட்டு மருந்து…

மெனோபாஸ் சிக்கல்களை தீர்க்கும்

Advertisement

 வலிப்பு நோய்

Advertisement

அப்ரமாஞ்சி …… லத்தின் மொழியில் ‘ நலம் தருவது’ என்னும் பொருள் கொண்டதாகும்.

வலிப்பு நோய்களுக்கு சிந்த மருந்தாகக் குறிப்பிடும் அப்ரமாஞ்சி தாவரம் ஈரமான இடங்களில் இயற்கையாக வளரும்.

இத்தாவரத்தின் தரையடித்தண்டு  இலையுதிர் காலத்தில் சேகரிக்கப்படுகிறது.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன.

போர்னைல் அசிடேட், பீட்டர் கேரிபில்லின், இரிடாய்டுகள், வெலிபோட்டிரியேட்கள், வால்டிரேட், ஐசோவால்டிரேட் மற்றும் ஆல்கலாய்டுகள், ஆகியவை உள்ளன.

இவை மருத்துவ குணங்களின் அடிப்படையாகும்.

மனநோய் போக்கும் தரையடித்தண்டு மற்றும் வேர்கள் மருத்துவப் பயன் உடையவை. தரையடித்தண்டும் வேரும் இணைந்து வெலிரியன் என்னும் மருந்தாகப் பயன்படுகிறது.

இவை தூக்கத்தை தூண்டும். தசைபிடிப்பு, தசையிறுக்கத்தை தளர்த்தி சுகமளிக்கும். படபடப்பு மற்றும் வலியுடைய உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

அஜீரணம் போக்கும் வல்லமை பெற்றது.
செயல் உணர்வுகளை  தூண்டும் ஆற்றல் பெற்றது, காய்ச்சல், மனஇறுக்கம், மனநோய், நரம்பு தளர்ச்சி, பயஉணர்வு முதலியவற்றிற்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.

குறிப்பாக… தாய்மையை நிறைவு செய்யும்… பருவ கால பிரச்சனை களில் ஒன்றான
மெனோபாஸ் சிக்கல்களை தீர்க்கும்…!

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119