வரலாற்றில் இன்று ( ஜூன் 1)

0
214
வரலாற்றில் இன்று ( ஜூன் 1)
Advertisement

வரலாற்றில் இன்று ( ஜூன் 1)

Advertisement

1938ல் தன் தோளுக்கிட்ட மாலையை பெரியார் தாளுக்கிட்ட பெருமகன்

சர்.A.T.பன்னீர்செல்வம் பிறந்த நாள் (1888)

திருவாரூர் – நன்னிலம் இடையே உள்ள செல்வபுரத்தில் பிறந்த செல்வச் சீமான்.

கத்தோலிக்கச் சர்ச்சுகளில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளை கடுமையாக எதிர்த்தார்.

நீதிக் கட்சியின் முக்கியத் தலைவராகி, அமைச்சராகி, தஞ்சை நகர சபைத் தலைவர், மூத்த புகழ்மிக்க வழக்கறிஞர், தஞ்சை உயர்நிலைக் குழுத் தலைவர்,

மாவட்டக் கல்விக் குழுத் தலைவர், வட்டக் குழு உறுப்பினர், மாவட்டக் குழுத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் என அவர் வகித்த பதவிகளுக்கு மிகப் பெரிய பட்டியலே போடலாம்.

தமிழவேள் உமாமகேசுவரானாருடன் இணைந்து கரந்தைத் தமிழ்ச் சங்கம் நிறுவி பின் கரந்தைத் தமிழ்க் கல்லூரி யாக இன்றும் விளங்குகிறது.

உமாமகேசுவரனார் தீவிரசைவ நெறியினர் .பன்னீர் செல்வமோ கத்தோலிக்கர் ஆனால் தமிழ் வளர்க்க இருவரும் இரட்டையர்களாக பாடுபட்டனர்.

நீதிக்கட்சியினர் தமிழ் வளர்க்க ஏதும் செய்யவில்லை என்ற வாதம் இவர்களின் தமிழ்ப் பணிகள் மூலம் தூசாயின.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ராஜா சத்திரங்களில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உணவளிக்கப்பட்டு வந்ததை மாற்றி எல்லா ஜாதியினர்க்கும் உணவளிக்க ஏற்பாடு செய்தார்.

தஞ்சையில் ஆதிதிராவிடர்கள் தங்கிக் கல்வி பயில முதன் முதல் விடுதியினைச் கட்டிய பெருமகன் ஏ.டி.பி. தான். இன்றும் அந்த விடுதி இயங்கி வருகிறது.

தமிழக அரசியல் சமூக சீர்திருத்த வரலாற்றில் மிக முக்கிய மாநாடாக மிளிர்ந்த முதலாவது செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் இளைஞர் மாநாட்டினைத் துவக்கி வைத்துப் பேருரையாற்றினார்.

இந்த மாநாட்டில் தான் தமிழர்கள் தங்கள் பெயர் களின் பின் சாதியைக் குறிப்பிடக்கூடாது என்று தீர்மானித்து அது நின்று பரவி இன்று சாதிப் பெயர் போடாத சூழல் நிலவுகிறது.

ஏ.டி.பி கலந்து கொள்ளாத மாநாடுகள் இல்லை. அவர் வகிக்காத உயர் பதவிகள் இல்லை.

1938ல் தந்தை பெரியார் சிறையில் இருந்த போது நீதிக்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது தனக்கு அணிவித்த மாலையை பெரியாரின் ஆருயரப்படத்தின் தீழ் அணிவித்து உணர்ச்சிகரமானதொரு உரை நிகழ்த்தினார்.

1930, 1931 ஆண்டுகளில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் Dr.அம்பேத்கர், இரட்டை மலை சீனிவாசன் ஆகியோருடன் கலந்து கொண்டார்.

18 – 1 – 1940 அன்று பிரிட்டிஷ் இந்திய அமைச்சரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு .01-03-1940 அன்று அவர் சென்ற ” ஹனிபால்” என்ற விமானம் விபத்தில் சிக்கியதால் மரணமடைந்தார். முதலில்  விமான விபத்தில் மறைந்த அரசியல் பிரமுகரானார்.

அமைச்சரவை ஆலோசகர் பதவியில் ATP தொடர்ந்திருந்தால் இந்திய விடுதலையின் போக்கு திசை மாறியிருக்கும்.

ATP மறைந்தபோது பெரியார் எழுதிய இரங்கல் செய்தி இன்று படித்தாலும் கண்கள் குளமாகும்.

அவர் மறைவிற்குப் பின் திராவிடர் இயக்கம் ATP  க்கு நன்றி செலுத்தும் விதமாக பன்னீர்செல்வம் என்ற பெயரை இன்றும் தங்கள் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்கின்றனர்.

ATP மறைந்த செய்தி கிடைத்தவுடன் சில “நூலோர்” கொண்டாடி மகிழ்ந்தார்களாம்.

அது கண்டு பொறுக்காத புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், “சிங்கத்தை நரியடிக்குந் திறமில்லை என்றாலும் பொங்குற்றே சிங்கம் இறந்ததென்றால் நரி மனம் பூரிக்காதா ” என்றார்.

வரலாறு பலரை உருவாக்கும், ஆனால் சிலரைத் தான் வரலாறு சுவீகரிக்கும். அதில் சர் ஏ.டி.பன்னீர்செல்வம் இரண்டாம் வகை.

தகவல்கள்: சங்கரமூர்த்தி, 7373141119

SHARE