அரக்கோணம் நகராட்சி ஆபீசில் தீக்குளித்த துப்புரவு தொழிலாளி பலி

0
142
Advertisement

அரக்கோணம்:

அரக்கோணம் நகராட்சி துப்புரவு பிரிவில் தலைமை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் ரகு (வயது 46). கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதே உடல் நிலையோடு அவர், சில மாதங்களாக மது அருந்தி விட்டு பணிக்கு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் மதியம் ரகுவின் மனைவி மதிய உணவு எடுத்துவந்து கொடுத்து விட்டு சென்றார். மனைவி சென்ற சில நிமிடங்களில் ரகு தனது அலுவலக வளாகத்திலேயே தன் உடலில்  மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார்.
இதில் படுகாயமடைந்த அவரை சக ஊழியர்கள், மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ரகு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் முத்து ராமலிங்கம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறில் மனமுடைந்து ரகு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது
Advertisement
SHARE
Rj suresh
வேலூர்