சசிகலாவுக்கு சிறையில் சலுகை வழங்கிய விவகாரம்.. விசாரணைக்கு உத்தரவு..!

39
502
சசிகலாவுக்கு சிறையில் சலுகை வழங்கிய விவகாரம்.. விசாரணைக்கு உத்தரவு..!
Advertisement

சசிகலாவுக்கு சிறையில் சலுகை வழங்கிய விவகாரம்.. விசாரணைக்கு உத்தரவு..!

Advertisement

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சலுகை வழங்கப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக,சசிகலாவுக்கு சிறையில் சலுகை வழங்கிய விவகாரம்.. விசாரணைக்கு உத்தரவு..!

உயர் மட்டக்குழு விசாரணைக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு சிறப்பு சமையலறை மற்றும் சலுகைகள் வழங்கப்படுவதாகவும்,

அதற்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா புகார் கூறியுள்ளார்.  ஆனால் அந்த புகாரை கர்நாடக டிஜிபி மறுத்தார்.

இந்நிலையில், இது குறித்து உயர் மட்டக்குழு விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், புகார் குறித்து உயர்மட்டக்குழு விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும், விசாரணை முடியும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டும் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

செய்திகள்: ரோகிணி

SHARE