மறக்கத்தான் முடியுமா? ஜுலை 11-2006.. இந்த நாளை..?

50
378
மறக்கத்தான் முடியுமா? ஜுலை 11-2006.. இந்த நாளை..?
Advertisement

மறக்கத்தான் முடியுமா? ஜுலை 11-2006.. இந்த நாளை..?

மும்பை ரெயில் நிலையங்களில் குண்டுவெடிப்பு: 200 பேர் பலி – ஜூலை 11- 2006..மறக்கத்தான் முடியுமா? ஜுலை 11-2006.. இந்த நாளை..?

2006-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ஆம் தேதி மாலை மும்பை புறநகர் ரெயில் நிலையங்களில் அடுத்தடுத்து ஏழு குண்டுவெடிப்புகள் நடந்தது.

இக்குண்டுகள் மும்பை மேற்கு புறநகர் ரெயில் நிலையங்களிலும் அவற்றுக்கு அருகே உள்ள சாலைகளிலும் வெடித்தன.

இக்குண்டு வெடிப்புகள் மாலை 6:24 முதல் 6:35 மணிக்குள் நிகழ்ந்தன. இந்நிகழ்வில் குறைந்தது 200 பேர் இறந்தனர். மேலும் 700க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

முதலாவதாக கால் ரெயில் நிலையத்திலும், அதனைத் தொடர்ந்து மாகிம், மாதுங்கா, ஜோகேஸ்வரி, பூரிவில்லா, பாயண்டர், ராக் மும்பை ரெயில் நிலையங்களிலும் குண்டு வெடித்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மேற்கு ரெயில்வேயின் அனைத்து ரெயில்களும் நிறுத்தப்பட்டன. மும்பையில் தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.

தில்லி, பெங்களூர், சென்னை உள்பட இந்தியா முழுவதும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தபட்டது. விமான நிலையங்களிலும் காவல் துறையினர் குவிக்கபட்டனர்.

இதேநாளில் பகலில் காஷ்மீரில் நடந்த குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர். அன்று மாலையே மும்பையில் குண்டு வெடித்தது நாட்டையே அதிரச் செய்தது.

தகவல்கள்: சங்கரமூர்த்தி, 7373141119

Advertisement
SHARE