தேசிய மருத்துவர் தினம் இன்று..!

35
941
தேசிய மருத்துவர் தினம் இன்று..!
Advertisement

தேசிய மருத்துவர் தினம் இன்று..!

Advertisement

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஒன்றாம் தேதி நம் நாட்டில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது.தேசிய மருத்துவர் தினம் இன்று..!

மேற்கு வங்க மாநிலம் தோற்றுவிக்கப்பட்டு இரண்டாவது முதல் அமைச்சராக இருந்தவர் பிடன் சந்திர ராய் (பி.சி.ராய்).

1882-ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பிறந்த இவர், நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவராக இருந்துள்ளார்.

(1948-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி முதல் 1962 ஜூலை 1-ஆம் தேதி வரை) 14 ஆண்டுகள் மேற்கு வங்க மாநில முதல்வராக திறம்பட பணியாற்றி உள்ளார்.

மருத்துவத்துறையில் திறம்பட பணியாற்றி பல்வேறு சாதனைகளை படைத்ததுடன், தன்னலம் பாராது பிறர்நலன் கருதி மகத்தான மருத்துவச் சேவை செய்ததால்,

மத்தியஅரசு 1961-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி பிடன் சந்திரராய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.

இந்திய மருத்துவத்துறைக்கு பெருமை தேடி தந்த பிடன் சந்திர ராய் தன்னுடைய 80-ஆவது வயதில், அதாவது 1962-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி இறந்தார்.

அவர் செய்த மருத்துவ சேவையை நினைவு கூறும் வகையில் இந்திய மருத்துவக்கழகம் அவருடைய பிறந்த நாளும், இறந்த நாளும் ஜூலை 1-ஆம் தேதி வருவதால், அன்றைய தினத்தை `தேசிய மருத்துவர் தினமாக’ அனுசரித்து வருகிறது.

தொடர்ந்து மருத்துவத் துறையில் சேவையாற்றி வருபவர்களுக்கு `டாக்டர் பி.சி.ராய்’ விருது தற்போது வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவர் தினம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.

`நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ இந்த கருத்தை மய்யமாக கொண்டு உடல்நலன் காக்கும் பணியில் நம் மருத்துவர்கள் செயல்படுகின்றனர்.

தன்னலம் பாராது பிறர்நலம் கருதி, சுயநலம் இல்லாமல் மகத்தான மருத்துவ சேவையை மனித நேயத்துடன் சேவை ஆற்றும் மருத்துவர்களை வாழ்த்தும் தினமாகவும்,

மருத்துவத்துறையை மேம் படுத்தும் தினமாகவும் அரசு பல்வேறு நடவடிக்கை களையும் எடுத்து வருகிறது. எனவே இன்று உங்கள் மருத்துவருக்கு தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்களைக் கூறலாம்.

தகவல்கள்: சங்கரமூர்த்தி, 7373141119

SHARE