ப்ளஸ் டூ முடித்தவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலை..!

41
596
ப்ளஸ் டூ முடித்தவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலை..!
Advertisement

ப்ளஸ் டூ முடித்தவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலை..!

Advertisement

டி துறையில் வேலை பறிபோகிறது எனப் பதறும் வேளையில், `பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் ஐடி வேலை வழங்கப்படும்என, ஹெச்.சி.எல் நிறுவனம் அறிவித்துள்ளது. ப்ளஸ் டூ முடித்தவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலை..!

பொதுவாக கல்லூரி படிக்கும்போதும் கடைசி செமஸ்டரின்போதும் நிறுவனங்கள் மாணவர்களைத் தேர்வுசெய்வார்கள்.

படிப்பு முடித்தவுடன் வேலைக்குச் சேர்வார்கள். தற்போது பள்ளியிலிருந்தே பணிக்குச் செல்லலாம் என்ற புதிய மாற்றத்தைத் தொடங்கியிருக்கிறார்கள் ஐடி நிறுவனத்தினர்.

முதல்கட்டமாக ஹெச்.சி.எல் நிறுவனம், இந்த ஆண்டு 200 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து ஒரு வருடப் பயிற்சியளித்து, மென்பொருள் பிரிவில் வேலை வழங்க இருக்கிறது.

ஓராண்டு பயிற்சியில் ஒன்பது மாதங்களுக்கு வகுப்பு சார்ந்த பயிற்சியும், மூன்று மாதங்களுக்கு நிறுவனத்திலேயே நேரடிப் பயிற்சியும் வழங்க திட்டமிட்டிருக்கிறது.

தேர்ந்தெடுக்கப்படும் 200 மாணவர்களில் 100 மாணவர்களுக்கு மதுரையிலும், மீதம் உள்ளவர்களுக்கு லக்னோவிலும் பயிற்சி வழங்கப்படும்.

இதில் மென்பொருளை உருவாக்குவது, டெஸ்ட்டிங் செய்வது, மென்பொருள் சப்போர்ட்டிங் பணிகளுக்கு உதவுவது, மென்பொருள் உள்கட்டமைப்பு, மேலாண்மை சேவைகள் குறித்தும் பயிற்சியளிக்கப்படும்.

சென்னையில் உள்ள எஸ்.எஸ்.என் கல்லூரி மூலம் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

அத்துடன் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் பல்வேறு திட்டப்பணிகளிலும் வேலைவாய்ப்பும் வழங்கப்படும். இவர்களுக்கு முதல் ஆண்டில் 1.8 லட்சம் ரூபாய் ஆண்டு சம்பளமாக வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, ஆரம்பத்தில் டிப்ளோமா சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பயிற்சியில் சேர்ந்து இரண்டு வருடப் பணி அனுபவம் பெற்ற பிறகு தபால் வழியே பட்டப்படிப்பை முடித்துவிடலாம்என்கிறார் ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தின் துணைத் தலைவர் ஶ்ரீமதி சிவசங்கர்.

தேர்வில் 85 சதவிகித மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சி.பி.எஸ்.இ கல்விமுறையில் படித்தவர்கள் 80 சதவிகித மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, http://www.hcltss.com/our-programs/class-12/ என்ற இணையதள முகவரியை அணுகலாம்.

SHARE