அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டிற்கு பினராயி விஜயன் அழைப்பு..!

31
431
அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டிற்கு பினராயி விஜயன் அழைப்பு..!
Advertisement

அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டிற்கு பினராயி விஜயன் அழைப்பு..!

இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகங்களை விற்கக்கூடாது என்று மத்திய அரசு கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது. அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டிற்கு பினராயி விஜயன் அழைப்பு..!

இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தில், கேரள அரசு கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்துவருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன்,

மத்திய அரசின் முடிவுகுறித்து ஆலோசனை செய்வதற்காக, அனைத்து மாநில முதல்வர்களும் ஒன்று சேர்ந்து அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டை நடத்தி ஆலோசனை செய்ய வேண்டும்.

இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வோம். அதற்கு முன்னதாக, இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தவேண்டியுள்ளதுஎன்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே,’மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களும் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டும்என்று மாநில முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்த்து குறிப்பிடத்தக்கது..

Advertisement
SHARE