57 கிலோ அஜீத் இட்லி..!

30
526
57 கிலோ அஜீத் இட்லி..!
Advertisement

57 கிலோ அஜீத் இட்லி..!

Advertisement

வீரம், வேதாளம் படத்துக்குப் பிறகு, சிவா, அஜித் கூட்டணியில் நாளை ‘விவேகம்’ திரைப்படம் வெளியாகயிருக்கிறது. 57 கிலோ அஜீத் இட்லி..!

அஜித், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தில்,

அஜித்தை இன்டர்நேஷனல் ஹீரோவாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சிவா.

இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாகயிருக்கும் நேரத்தில், அஜித்தின் மீது வைத்திருக்கும் அலாதி பிரியத்தால் சமீபத்தில் கும்பகோணத்தில் அஜித்துக்காகச் சிலை திறந்தனர்.

தற்போது, வடசென்னையில் உள்ள வீர சென்னை அஜித் நண்பர்கள் சார்பாக 57 கிலோ எடை கொண்ட இட்லியில்,

அவர் உருவம் பொறித்து அதை பாரத் திரையரங்க முகப்பில் வைக்க இருக்கிறார்கள்.

                    

அஜித்தின் வீட்டுக்கும் எடுத்து செல்லலாம் என்றும் ரசிகர்கள் எண்ணுவதாக கூறப்படுகிறது.

முதலில் அஜித் உருவம் போன்று ஒரு மாடல் வரைந்து அதற்கு மேல் இட்லி மாவை ஊற்றி இந்த இட்லியைச் செய்யவுள்ளோம்.

இட்லி வெந்த பிறகு, அதன் மேல் கைவேலைப்பாடுகளும் உண்டு. அஜித் இந்த இட்லியைப் பார்ப்பர் என்று நம்புகிறோம்” என்றும் இந்த இட்லி தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE