ரெய்ன்ட்ராப்ஸ் “ஜிங்கிள் பெல்ஸ்” நிகழ்ச்சி.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

Advertisement

400 குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.

ரெயின்ட்ராப்ஸ் நிறுவனம்.

Advertisement

ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும்.

இதன் நிறுவனராக அரவிந்த் ஜெயபால் உள்ளார். இந்த அமைப்பு ஊடகங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக சமூக விழிப்புணர்வு கருத்துகளை கூறி வருவதன் மூலம் மிகவும் பிரபலமானது.

குழந்தைகளுக்குஇலவச கல்வி, பெண்கள் முன்னேற்றத்தைக் கூறும் சாதனைப் பெண்கள், சாலையோரம் பசித்திருக்கும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் விருந்தாளிதிட்டம் போன்றவை ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நற்பணிக்கு சான்றுகளாகும்.

இந்த அமைப்பின் நல்லெண்ணத் தூதராக ஆஸ்கார் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா உள்ளார்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

பன்முகத் திறன் கொண்ட இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பான ரெயின்ட்ராப்ஸ்,400 குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடினர். ஆனந்தம், சேவாலயா மற்றும் சீரிஸ் பெண்கள் இல்லத்திலிருந்து குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பங்கேற்றனர்.

 இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக விஜிபி குழுமத்தின் தலைவர் விஜி சந்தோசம், நடிகர்கள் ஜார்ஜ் விஜய் , ரியோ , கிருத்திகா மற்றும் இன்போலைன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தலைவர் சிவராம் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பின்னணி பாடகர்கள் நிகில் மாத்தியூ, அரவிந்த், ராஜகணபதி, இர்வின், ஹரிதா, ஜோதி, விசில் இசை கலைஞர் ஸ்வீதா, பலக்குரல் கலைஞர் நவீன், ட்விஸ்ட் அண்ட் டர்ன் நடன குழு, மாஸ்டர் சஞ்சய் ஆகியோர் பங்கேற்று தங்கள் நிகழ்ச்சிகள் மூலம் குழந்தைகளை மகிழ்வித்தனர்.

இந்நிகழ்ச்சியில் 400 சிறுவர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் மற்றும் மதிய விருந்து வழங்கப்பட்டது. சத்தியபாமா பல்கலைகழகம், கேக் பாயிண்ட், ஸுபி கேண்டீஸ், யுவா மீடியா, மெகா டிஜிட்டல், மற்றும் சாஜ் அண்ட் தாஜ் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சி சிறக்க துணை நின்றனர்.

மாவட்ட கேமராமேன் விமல்கமல் உடன் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்