108- ஆண்டு அபூர்வ பிரதோஷம்-அர்த்தமுள்ள…ஆன்மீகம்.

29.1.2018 வருடம் ஹேவிளம்பி

Advertisement

108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அபூர்வ பிரதோஷம்

Advertisement

வரும் 29.1.2018 வருடம் ஹேவிளம்பி ஆண்டு திங்கள் கிழமை  வரும் பிரதோஷம்  108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மிகவும்  அபூர்வ  பிரதோஷம்.

இந்த  பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால்  சிவனுக்கு உகந்த  நாள் நட்சத்திரம் திதி ஒன்றாக வரும் அபூர்வ  அமைப்பு கொண்டது.

இந்த நாளில் திங்கள் கிழமை திருவாதிரை நட்சத்திரம் திரயோதசி
இந்த மூன்றும் ஒன்றாக வரும்

அபூர்வ நாள் இந்த  அபூர்வ நாளில் நாம் பிரதோஷ வழிபாடு செய்தால் 108 பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும்

இந்த அபூர்வ பிரதோஷம் அன்று நாம் சந்தனம் , பால் , இளநீர் கொண்டு சிவனுக்கும் நந்திக்கும்  அபிஷேகம் செய்து வில்வ மாலை அணிவித்து நாம் வழிபாடு செய்தால்  நாம் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் மற்றும் ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம் ,ராகு கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.

தொழில் மேன்மை அடையும் ,கடன் பிரச்சனை தீரும்,திருமணம் தடை நீங்கும்

போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிட்டும்

நாமும் இந்த  அபூர்வ  பிரதோஷ வழிபாடு செய்து நன்மைமை பெறுவோம்

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119