நாம் மறந்துபோன நம்ம நாட்டு மருந்து பகுதி – 37…!

0
168
நாம் மறந்துபோன நம்ம நாட்டு மருந்து பகுதி - 37…!
Advertisement

நாம் மறந்துபோன நம்ம நாட்டு மருந்து பகுதி – 37…!

Advertisement

அம்மான் பச்சரிசி கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் மருத்துவக் குணம் கொண்டவை.நாம் மறந்துபோன நம்ம நாட்டு மருந்து பகுதி – 37…!

இந்த அம்மான் பச்சரிசியிலேயே மிகச்சிறிய அளவில் தரையோடு படர்ந்து காணப்படும் கொடி வகையும் உண்டு.

இதன்கொடி மூன்று அங்குலம் நீளமாக தரையோடு தரையாக படர்ந்து காணப்படும்.

இந்த இரண்டு கொடிகளின் மருத்துவ குணம் ஒன்றுதான். இதனை அம்மான் பச்சரிசிச் கொடி இலை என்றும். எம்பெருமான் பச்சரிசி என்றும் அழைப்பார்கள்.

அம்மான் பச்சரிசி இலையைக் கொண்டு வந்து சுத்தம் செய்து, துவரம்பருப்பு சேர்த்து சமைத்து,

தினமும் பகல் சாதத்துடன் சேர்த்து ஏழுநாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றுப் புண்ணும், வாய்ப் புண்ணும் ஆறும்.

வயதானவர்களுக்கு இரவில் இருமல் ஏற்படும். இதனால் மிகவும் கஷ்டப்படுவார்கள்.

இதைக் குணப்படுத்த அம்மான் பச்சரிசியிலையைக் கசக்கிச் சாறு பிழிந்து வடிகட்டி நான்கு தேக்கரண்டியளவு சாறு எடுத்து,

தேக்கரண்டியளவு சர்க்கரை சேர்த்துக் காலை வேளையில் மட்டும் தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஓயாத இருமல் ஜலதோஷம் குணமாகும்.

அம்மான் பச்சரிசி குடல் புழுக்களைக் கொல்லும், உள்ளுறுப்புகளிலுள்ள காயங்களை ஆற்றும், மலமிளக்கும், சுவாசத்தைக் சீராக்கும்,

இருமலைக் தணிக்கும், பெண்களுக்குப் பால் சுரப்பதைத் தூண்டும், பால் மருக்களைக் குணமாக்கும்.

தாய்ப்பால் சுரப்பு அதிகமாக பசுமையான அம்மான் பச்சரிசி செடிகளைச் சேகரித்துக் கொண்டு, நன்கு கழுவி, அரைத்து,

எலுமிச்சம்பழ அளவு 1 டம்ளர் பாலில் கலக்கி, தினமும் காலை, மாலை இருவேளைகள் பாலூட்டும் தாய்மார்கள் குடிக்க வேண்டும்.

இரத்தக் கழிச்சல் குணமாக அம்மான் பச்சரிசி இலைகளை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, 200 மி.லி. பசும்பாலுடன் கலந்து, தினமும் காலையில் மட்டும் மூன்று நாட்கள் குடிக்க வேண்டும்.

அம்மான் பச்சரிசி பால் ஒரு அரிய மருந்தாகும். அம்மான் பச்சரிசி பாலை முகத்தில் தடவ, முகப்பரு, எண்ணெய்ப்பசை ஆகியவை மாறும்.

காலில் பூசிவர, கால் ஆணி, பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்பு ஆகியவை மறையும். பால் பருக்கள் மீது பூச அவை உதிரும். இதனை உள் ம‌ருந்தாகக் கொடுக்க இரைப்பு குறையும்.

ஆஸ்த்துமா, வாய்ப்புண் ஆகியவற்றுக்கான மருத்துவத்திலும் அம்மான் பச்சரிசி துணை மருந்தாகப் பயன்படுகின்றது.

அதிக அளவில் உட்கொண்டால் வாந்தியைத் தூண்டும். இதன் நோய் எதிர்ப்புச் சக்தியும், காசநோயைக் கட்டுப்படுத்தும் பண்பும் மருத்துவ ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

தகவல்கள்: ரோகிணி

SHARE