பாதாம் பர்ஃபி

0
238
பாதாம் பர்ஃபி
பாதாம் பர்ஃபி
Advertisement
Advertisement

பாதாம் பர்ஃபி

பாதாம் பர்ஃபி
பாதாம் பர்ஃபி

பால் மற்றும் நெய் இல்லாமல் மிகச் சுலபமாக செய்யக்கூடிய இந்த பாதாம் பர்ஃபி, வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள் :

பாதாம் – 1½கப்,
சர்க்கரை – 1¼ கப்,
ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன்,
தண்ணீர் – 100 மில்லி,
குங்குமப்பூ மற்றும் சீவிய பாதாம், பிஸ்தா – மேலே தூவ.

செய்முறை:

* பாதாமை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து தோலை உரித்து கொள்ளவும்.

* தோல் நீக்கிய பாதாமை வாணலியில் ஈரம் போக லேசாக வறுத்து பொடி செய்துக்கொள்ள வேண்டும்.

* சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து நான்ஸ்டிக் வாணலியில் கொதிக்க விட வேண்டும். சர்க்கரை நன்கு கரைந்தவுடன் ஏலக்காய் பொடி சேர்த்து பாதாம் பொடியையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

* பாதாம் கலவை நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் சேர்ந்தும் வரும் வரையில் கைவிடால் கிளறி அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

* ஆறிய பின் அதை நன்கு வெடிப்புகள் இல்லாமல் பிசைந்துக்கொள்ள வேண்டும்.

* பிசைந்த மாவு பட்டர் பேப்பர் அல்லது நெய் தடவிய தட்டில் பரப்பி மேலே பாதாம் துண்டுகள் மற்றும் குங்குமப்பூவை தூவி துண்டுகள் போட்டு மேலும் ஆறியவுடன் காற்று புகாத டப்பாவில் வைத்து பரிமாறவும்.

* இப்போது சூப்பரான பாதாம் பர்ஃபி ரெடி.