பட்டாணி மசாலா

30
673
பட்டாணி மசாலா
Advertisement

தேவையானவை:

Advertisement

பட்டாணி – 1 கப்
நறுக்கிய பெரிய வெங்காயம் – 3
நறுக்கிய தக்காளி – 3
புளிக்காத தயிர் – கால் கப்
இஞ்சி, பூண்டு விழுது – 2  ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2  ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்
வெண்ணெய் –  25 கிராம்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பட்டாணியை    ஊற வைத்து  உப்பு சேர்த்து   குக்கரில்  2  விசில்  விட்டு  வேகவைத்து  கொள்ளவும்.

கடாயில்   வெண்ணெய்  ஊற்றி    உருக்கி, அதில்   நறுக்கிய  வெங்காயம்  போட்டு 2 நிமிடம்  வதக்கி அதனுடன்    இஞ்சி, பூண்டு விழுது,  சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி  அதனுடன்  மிளகாய்த் தூள், தனியா தூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி  இதனுடன், உப்பும்  நறுக்கிய தக்காளியும் சேர்த்து, நனகு வதக்கி   அதனுடன்  தயிர், தேவையான தண்ணீர், வேகவைத்த பட்டாணியை சேர்த்து,அதனுடன்   கரம் மசாலாவைத் தூவி, நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.

சுவையான  பட்டாணி  மசாலா ரெடி.

SHARE