தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான கோதுமை அல்வா

35
688
தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான கோதுமை அல்வா
தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான கோதுமை அல்வா
Advertisement
Advertisement

தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான கோதுமை அல்வா

தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான கோதுமை அல்வா
தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான கோதுமை அல்வா

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 250 கிராம்,
சர்க்கரை – 500 கிராம்,
நெய் – 10 கிராம்,
முந்திரி – 100 கிராம்,
ஏலக்காய் தூள் மற்றும் கேசரி கலர்.

செய்முறை :

* கோதுமை மாவை தண்ணீரில் நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

* முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அடி கனமான வாணலியில் கோதுமை கரைசலை கொட்டி நன்கு கிளற வேண்டும்.

* மாவு கெட்டியாகும் போது சர்க்கரை கேசரி பவுடர் சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும்.

* சர்க்கரை கரைந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெய்யை விட்டு அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

* ஓரங்களில் நெய் பிரிந்து அல்வா சுருண்டு ஒட்டாமல் வரும் வரையில் கிளற வேண்டும்.

* அல்வா கெட்டியானதும் ஏலக்காய் பொடி, முந்திரி சேர்த்து மேலும் கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறிய பின் துண்டு போட்டு பரிமாறவும்.

* சுவையான கோதுமை அல்வா ரெடி.