சுவையான கொண்டைக்கடலை சாதம் செய்வது எப்படி

0
703
சுவையான கொண்டைக்கடலை சாதம் செய்வது எப்படி
சுவையான கொண்டைக்கடலை சாதம் செய்வது எப்படி
Advertisement
Advertisement

சுவையான கொண்டைக்கடலை சாதம் செய்வது எப்படி

சுவையான கொண்டைக்கடலை சாதம் செய்வது எப்படி
சுவையான கொண்டைக்கடலை சாதம் செய்வது எப்படி

கொண்டைக்கடலையில் சுண்டல், குருமா செய்வதற்கு பதிலாக கொண்டைக்கடலை சேர்த்து சாதம் செய்யலாம். வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

தேவையானப் பொருள்கள் :

பச்சரிசி – 2 கப்
கொண்டைக் கடலை – 3 கைப்பிடி
பெரிய வெங்காயம் – 1
சின்ன வெங்காயம் – 10
தக்காளிப் பழம் – 1
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
பூண்டு – 3 பற்கள்
பச்சை மிள்காய் – 1
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிது
தயிர் – 1 டீஸ்பூன்
தேங்காய்ப் பால் – 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை – 1 கொத்து

தாளிக்க :

நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் – 1/2 டீஸ்பூன்
முந்திரி – 5

செய்முறை :

* கொண்டைக் கடலையை முதல் நாளே ஊற வைத்து விடவும். அடுத்த நாள் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து நீரை வடித்து விடவும்.

* அரிசியை சிறிது உப்பு போட்டு முக்கால் பதத்திற்கு வேக வைத்து ஆற‌ வைக்கவும்.

* சின்ன வெங்காயம்,தக்காளியை அரைத்து வைக்கவும்.

* பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இஞ்சி, பூண்டு தட்டி வைக்கவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாக தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிய பின் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

* அடுத்து கொண்டைக் கடலையை சேர்த்து சிறிது வதக்கிய பின் வெங்காயம், தக்காளி அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அத்துடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தயிர், உப்பு சேர்த்து வதக்கவும். (ஏற்கனவே கடலை,சாதம் இவற்றில் உப்பு சேர்த்திருப்பதால் கொஞ்சம் குறைத்தே போட வேண்டும்).

* அனைத்தும் நன்றாக வதங்கியதும் தேங்காய்ப் பால் சேர்த்து சாதத்தைக் கொட்டி கிளறி மிதமான தீயில் மூடி வைக்கவும்.

* சிறிது நேரம் கழித்து எலுமிச்சை சாறு ஊற்றி, கொத்துமல்லி இலை தூவி ஒரு கிளறு கிளறி மறுபடியும் 5 நிமிடம் மூடி மிதமான தீயில் வைக்கவும்.

* இப்போது சுவையான கொண்டைக் கடலை சாதம் தயார்.